அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 31 டிசம்பர், 2012

இந்தியப் பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் – அருணகிரிநாதர்


Arunakiri

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும்.
மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள்; தலைமை கண்டுகொள்ளுமா?




Metro
-அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள் நேற்றை 24வது மாநாட்டில் அவர்கள் தலைமைத்துவத்துக்கும் உயர் பீடத்துக்கும் வேதனையில் தெரிவித்த விடயங்கள்
அக்கரைப்பற்று தவம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசு சுனாமியினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட அரசாங்கம் கடந்த 2 வருடமாக இழுத்தடிப்ப்பு செய்து வருகின்றது. இதற்காக கடந்த வாரம் அக்கரைப்பற்றில் ஒர் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டததிலாவது இப் பிரச்சினை பேசப்படுவதில்லை.
இதனைப் பற்றி பேசுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பிதலும் விடுக்கப்படுவதில்லை. அங்குள்ள நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளடக்கப்படுவதும்மில்லை.
அட்டாளைச்சேனையில் திவிநகுமு பட்டதாரிகளை நிரந்தர நியமணத்தின்போது நூற்றுக்கு நூறு வீதம் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நியமணம் வழங்கபட்பட்டது. இப்பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு பழிவாங்கள் நடைபெற்றது.
முஸ்லீம் காங்கிரஸ் நூற்றுக்கு நூறு வீத ஆதரவாளர்களைக் கொண்ட கிரமமான பாலமுனையைச் சோந்த ஒருவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் நியமணம் பெற்றுள்ளார். அவர் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் சேவையாற்றுகின்றார். அவரை கிழக்கு போக்குவரத்து சபைக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தார்.
ஆனால் அவர் வினயமாகக் கேட்டுக்கொண்ட விடயம் என்னவென்றால் ஒருபோதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லது அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எனக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். வேறு வழியில் முயற்சிக்கவும் என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்த அரசில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரையே சொல்லவேண்டாம் என கட்சியின் போராளி சொல்லக்கூடிய அளவுக்கு இந்தக் கட்சி போராளிகள் பழிவாங்கப்படுகின்றனர்.
திருக்கோவில் பொத்துவில் கரங்கோ, வாழைச்சேனைப் பகுதிகளில் முஸ்லீம்களின் நிலப்பிரச்சினைகள் இன்னும் தீர்ககப்படவில்லை. சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை முஸ்லீம் மாணவர்கள் கூடுதலாக சித்தியடைந்தாலும் அதனை முஸ்லீம் கங்கிரஸ் தலைவர் நீதியமைச்சராக இருந்தாலும் அவரது மண்டையில் இதனை போட்டு துவேசம் பேசுகின்றனர். என அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவம் தெரிவித்தார்.
முசாஜித் மௌலவி-வன்னி
இன்று மண்னார் போன்ற பகுதியில் வெள்ளம் மக்கள் பெரிதும் துண்பப்படுகின்றனர். இந்தத் தலைமைத்துவம் இங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றதா ? அம் மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததா?
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் மண்னார் சிறையில் வாடுகின்றார் அவாகளுக்காக ஒரு சட்டத்தரணியையாவது மண்ணார் நீதிமன்றத்துக்கு இந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் அனுப்பி வைத்ததா? அல்லது அவரது கையடக்கத் தொலைபேசியிலாவது பேசமுடியுமா ? ஆனால் இக் கட்சிசை ஆரம்பித்த மர்ஹூம் அஸ்ரபிற்காக நான் இறுதி வரை இக் கட்சியில் இருந்தே உயிர் துறப்பேன் எனக் கூறினார். இங்கு வெளிப்படையாக பேசுவதெல்லாம் இந்த தலைமைத்துவம் இதனைக் கேட்டு கட்சி போராளிகளது உள்ளக்குமுரல்களை உணர்ந்து தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன ஆக்ரோசமாக பேசினார்
நஜீம் – திருகோணமலை
திருகோணமலையில் மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அண்மையில் குச்சவலிப்பிரதேசத்தில் படாசாலை விடயமாக அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்பட்ட விடயத்தை விவரித்துக் கூறப்பட்டது. குச்சவெலிப் பிரதேசம் நூறுவீதம் முஸ்லீம் காங்கரஸ் ஆதரவாளர்கள் என்றதனால் நாங்கள் பழிவாங்கப்படுகின்றோம். இதற்காக முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சா ஆசனத்தில் நஜீப் மஜீதை அமர்த்தினீர்கள்.
புஞ்சிநிலமே பிரதியமைச்சர் திருமலையில் 3 சிங்களக் கிராமத்தினை உட்படுத்தி நகரசபையில் 53 உறுப்பினர்களாக கூட்டுவதற்கு சிங்களக் குடியேறறக் கிராமத்தை உறுவாக்கி வருகின்றார்.
1965ல் நீதிமன்றம் இருந்த காணியை தொல்பொருள் உள்ள பிரதேசம் என்ற போர்வையில் 9 அரை ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளனர். இப் பிரதேசத்தில் 1521ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் முஸ்லீம்கள் வாழ்ந்த பிரதேசத்தில் முஸ்லீம் பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுத்த வரலாறு உள்ளது.
எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் பல்வேறு எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. திருமலை மாவட்டத்திற்கு பிரதியமைச்சரோ அல்லது மாகாண அமைச்சோ முஸ்லீம் காங்கிரஸ் வழங்கவி;ல்லை.
இப்படி இந்த ராஜபக்ச அரசில் நாம் பழிவாங்கப்படுகின்றோம். நாம் தொடர்ந்து இந்த அரசில் இருப்பதா இல்லையா என்பதை தலைமைத்துவமும் அதி உயர்பீடமும் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
ஏ.எல்.எம் ஜப்பார் மரைக்கார் – புத்தளம்
புத்தளத்தில் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் செய்த சேவைக்குப் பிறகு அங்கு எவ்வித அபிவிருத்தியும் நடைபெறவில்லை. அஸ்ரப் சேர் அவர்கள் புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு ஒரு கட்டத்தினை நிர்மாணித்துக் கொடுத்தார். கட்சிக் கூட்டங்கள் மற்றும் தலைவர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து ஒரு சதமேனும் அப்பிரதேசத்துக்கு வழங்கப்படுவதுமில்லை என தெரிவித்தார்.
ஜலால்தீன் – சாய்ந்தமருது
வவுனியாவில் நடைபெற்ற பேராளர் மாநாட்டுக்குப்பிறகு 1 அரை வருடத்திற்குப் பிறகு இன்று இங்கு ஒன்று கூடியுள்ளோம். நாம் ஆகக் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது பேராளர் மாநாட்டை நாட்டின் பல்வேறு பிரதேசத்திற்கும் சென்று நடத்த வேண்டும். இங்கு குழுமியிருக்கின்ற ஒவ்வொருவரும் தமது மணக்குமுரல்களுட்ன் இங்கு வந்திருக்கின்றார்கள். நமது சமுகத்தின் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்ந்த பாடில்லை.
நளீம் – மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 ஆயிரம் வாக்குகளை எடுத்த முஸ்லீம் காங்கிரஸ் தற்பொழுது 8ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இக் கட்சி பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? அடிமட்ட போராளிகள் எல்லோரும் வெறுப்படைந்துள்ளார்கள்.
திவிநகும திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். கட்சியின் ஆதரவாளரது கடை எரிக்கப்பட்டது அதனை இந்த தலைமைத்துவம் வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுத்ததா?
ஆனால் என்னதான் சொன்னாலும் இந்தக் கை அந்த மரத்திற்கே வாக்களிகக் பழகிவிட்டது. இந்தக் கட்சியை யாராளும் அழிக்க முடியாது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இந்தக் கட்சியை நாம் வளர்த்து எடுத்தல் வேண்டும்.
றம்சி -கம்பஹா
கிழக்குப் பிறகு அடுத்து வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக மேல்மாகணததில் முஸ்லீம் காங்கிரஸ் திகழப்போகின்றது. அதற்காக களுத்துறை கம்பஹா கொழும்பு போன்ற மாவட்டத்தில் இரண்டாவது சக்தியாக முஸ்லீம் சமுகம் வாழ்ந்து வருகின்றது. அதற்காக கிழக்கு சகோதரர்களே நீங்கள் பொறுத்திருங்கள். கம்பஹா மாவட்டத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லீம் காங்கிரசின் அலட்சியத்தினாலேயே அத்தணகல்லை உள்ளுராட்சித் தேர்தலில் தேர்தல் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.
களுத்துறை பிரதிநிதி
இனத்துவேசம், முஸ்லீம்களது பள்ளி உடைப்பு போன்ற விடயங்களில் முஸ்லீம் காங்கிரசின் செயற்பாடு எனன? நீங்கள் எடுத்த தீர்மாணம் என்ன? பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க சரியா சட்டம் பற்றி பேசியதற்கு முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் யாராவது வாய்திறந்து பேசினீர்களா?

அதிகாரப்பகிர்விற்கான படிமுறைகளைக் கீழறுப்புச் செய்யும் செயல்களை எதிர்ப்போம்; மு. கா வின் எட்டுத் தீர்மானங்கள்!



SLMC2
2012.12.29 ம் திகதியன்று நடைபெற்ற ஸ்ரீpலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களின் 24வது மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஸ்ரீலங்கா பல்லின, பலமத, பலமொழி கொண்ட பன்முகமானதென்றும் பிளவுபடாது ஐக்கியப்பட்டு எல்லா சமூகங்களும் தீர்மானம் எடுப்பதில் முறையான பங்கேற்பின் மூலம் சமமாக வாழமுடியுமென்றும், அரச அதிகாரத்தை திருப்தியான அதிகாரப்பகிர்வின் மூலம் பரவலாக்கி எல்லாருக்கும் வாய்ப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பவற்றையும் உள்ளடக்கியதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்திற்கான நோக்கங்கள் இருப்பதாலும்
அதிகாரத்தைப் பரவலாக்கி ஒப்படைப்பதன் மூலம் எல்லாக்குடிமக்களுக்கும் தன்னாட்சி செய்யும் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஆக்க பூர்வமான படிமுறையாக மாகாண சபைகள் முறை அமையும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதனால் மாகாணசபைத்தேர்தல்களில் பங்குகொண்டும் இனங்களுக்கிடையேயான பிரச்சினைக்கு இசைவிணக்க முறையில் கலந்துரையாடித் தீர்வினை எட்டுவதற்கான ஸ்ரீலங்கா அரசின் எல்லா முன்னெடுப்புகளிலும் பங்கேற்று வந்திருப்பதனாலும்
கட்டுக்கடங்காது பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற அடர்த்தியானதுவும் மிகப்பரந்தளவிலானதுமான செயற்பாடுகள் குறித்து மிக ஆழ்ந்த கவலையோடும் கரிசனையோடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்குவதோடு அதிகாரம் பகிர்ந்து பரவலாக்கும் முயற்சியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிட எடுக்கப்படும் முயற்சிகளையும் நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை நீர்க்கச் செய்வதன் மூலம் செயற்பாட்டிலுள்ள அதிகாரப்பரவலாக்கலை முற்றாக மூடி விட, இல்லாதொழிக்கவும் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கி விடவும் எடுக்கப்படும் முயற்சிகளையும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள் குடியமர்த்துவதில் காட்டப்படும் அசிரத்தையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழ்ந்த கரிசனையுடனும் சிரத்தையுடனும் நோக்குகிறது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களாகிய நாம் பின்வரும் விடயங்களைக் குவியப்படுத்தி முன்னுரிமை தருவதற்காக தீர்மானம் எடுப்பதாவது:
  • சமய வெறுப்புணர்வூட்டும் உரைகளைப் பரப்புரை செய்வது பற்றியும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற பிரச்சினைகள் குறித்தும் எல்லா சமயங்களும் சமயவழிபாட்டிடங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் எல்லா சமயச்செயற்பாடுகளும் வழிபடுமுறைகளும் மரபுகளும் பேணிப்பாதுகாக்கப்படவும் அவ்வச்சமயங்களைப் பின்பற்றுவோரின் திருப்திக்கமைய செயற்பட அனுமதிக்கப்படுவது பற்றியும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்துவதற்கு அரசின் மீது இயன்றவரை செல்வாக்கைப் பிரயோகித்து செயற்படுத்த அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுத்தல
  • ஆட்சிப்பகிர்வை அடைவதற்கும் எல்லாக்குடிமக்களதும எண்ணிக்கையில் சிறியதான சமூகங்கள் உள்ளடங்கலாக எல்லாச்சமூகங்களதும் மதிப்புள்ள கூட்டு வாழ்வுக்கும் அதிகாரப்பகிர்வு உறுதி செய்யப்படுதல் வேண்டுமென்ற எமது பற்றுறுதியை 24ஆம் பேராளர் மாநாட்டில் வலியுறுத்துவது சாலப்பொருத்தமானதாகும்.
  • மாகாணசபைகளுக்கான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கச்செய்யவும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை வலுக்குறைக்கும் அல்லது சிதைக்கும் முயற்சிகளையும் அல்லது ஏதேனும் மாற்று ஏற்பாட்டுடன் இப்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபையினால் செயற்படுத்தப்படும் அதிகாரங்களைப் பிரயோகிக்கக்கூடிய உடனியங்கு அமைப்பொன்றை உருவாக்கும் அல்லது எல்லாச்சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வண்ணம் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் மாற்றுப் பொறிமுறையொன்று உருவாக்கப்படாது, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் எல்லா எத்தனங்களையும் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம் அதிகாரப்பகிர்விற்கான படிமுறைகளைக் கீழறுப்புச் செய்யும் செயல்களுக்கான முயல்வுகளை எதிர்ப்போம் என்றும் ஸ்ரீலங்காவை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகளைப் பாதுகாக்கும் உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்விற்காகப் பற்றுறுதியோடு செயற்படுவோம் என்றும் தீர்மானம் செய்கிறோம்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது இது முதற்கொண்டு நடைமுறையிலுள்ள மாகாணசபைகளின் அதிகாரத்தைப் படிப்படியாக அழிப்பதற்கான சட்டவாக்கங்களைக் கொண்டுவர எண்ணினாலோ அல்லது அதற்கு இலக்கு வைத்தாலோ அதனை எதிர்ப்பதோடு தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறையான அதிகாரப்பரவலாக்கத்தைக் கருத்துள்ளதாக்க அதனை மேலும் செம்மைப்படுத்திப் பலப்படுத்த கடும் முயற்சி செய்வோம் என்றும் உறுதி பூணுகிறோம்.
  • போர் முடிந்து 43 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் போரினால், அண்மையில் இடம் பெயர்ந்தவர்களும் நீண்டகாலமாக இடம் பெயர்ந்துள்ளவர்களும் திருப்தியளிக்கக்கூடிய இழப்பீடுகளுடன் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.இந்நிலை தெளிவாகவும் முக்கியமாகவும் 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்ட முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம,; அரசாங்கம் உள்ளக இடப்பெயர்ந்தோரையும் அகதிகளையும் அத்தோடு வடமாகாணத்துக்குத் திரும்ப விரும்புகின்ற வடமாகாண முஸ்லிம்களுக்கு உதவும் வண்ணம் தகுந்த சூழலையும் ஏற்படுத்தி அவர்களது பொருளாதார சமூக கலாசார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அதற்கென மீளக்குடியமர்த்தலுக்கான தேசியக்கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த அரசு உடனடியானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது கற்றறிந்த பாடங்கள் மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வழிப்படுத்தியும் நெறிப்படுத்தியும் செல்லவேண்டுமென தீர்மானிக்கிறது.
  • இந்த மாநாடு, தாயகத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் போராடும் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தனது கூட்டொருமைப்பாட்டைத் தெரிவிப்பதோடு பலஸ்தீனத்துடனான தனது உறவுகளை ஸ்ரீலங்கா அரசு மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் காஸாவில் உள்ள இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கட்டுமானங்களைக் குலைப்பதற்கு பலஸ்தீனம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆக்க பூர்வமாக ஒத்துழைக்க வேண்டுமென்றும் பலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் நிலையான தீர்மானங்களை எய்துவதற்குத் துணை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது

சிறுபான்மையினரின் உயர் கல்விக்கு ஆப்பு வைக்க முயற்சி; திறமைக்கும் குழிபறிக்க சதி!



law_CI
-சத்தார் எம்.ஜாவித்-
2013 ஆம் ஆண்டிற்கான சட்டக்கல்லூரி கற்கை நெறிக்கான நுழைவுப் பரீட்சையில் இம்முறை மொத்தமாக 309 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் மாணவர்கள். அத்துடன் இதை விட சற்றுக்குறைவன வீதத்தில் தமிழ் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சகல மொழி மாணவர்களுக்கும் ஒரே மாதிரயான வினாப் பத்திரங்களைக் கொண்ட போட்டிப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிக்காட்டி இம்முறை சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டதை சில பெரும்பான்மை இனவாத கட்சிகளும், சில இனவாத சமயத் தலைவர்களும் ஜீரணிக்க முடியாது, தம்மாலும் திறமையைக் காட்ட முடியவில்லை- மற்றவனையும் முன்வரக் கூடாது என்று சிறுபான்மை இனம் மீது இனவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை சிறபான்மை இனம் மட்டுமல்ல புத்தியுள்ள பெரும்பான்மை இன புத்திஜீவிகளும் கூட இவர்களின் இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றனர்.
இன்று இதனை பொறுக்க முடியாத சில இனவாத செயற்பாட்டாளர்களும், போலிச் சமயத் தலைவர்களும் சிறுபான்மையினரான முஸ்லிம் மாணவர்களின் இந்து திறமையை சகிக்க முடியாது ஏன் தம்மால் முடியாத கையாலாகாத் தன்மையினால் இனவாதச் செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம் தமிழ் மாணவர்களை ஓரங்கட்டச் செய்து வருகின்றனர்.
அத்துடன் தமது இனத்தை படிக்கா விட்டாலும் அல்லது திறமை இல்லா விட்டாலும் மொக்குத்தனமாக இவ்வாறான திறமைமிக்க கல்விகளில் ஆதிக்கம் செலுத்த குறுக்கு வழிகளை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் இந்தச் செயற்பாடு கடந்த காலங்களில் உயர் கல்விகளிலும், உயர் தொழில் பதவிகளிலும் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு திறமையற்றவர்களை உள்வாங்கி வருகின்றமையை உறுதி செய்வதாக உள்ளமை இவர்களின் தற்போதைய செயற்பாடுகள் இங்கு புலப்படுகின்றது.
இந்தச் சட்டக்கல்லுரி பட்டப்படிப்பிற்கு கடந்த 2007 மற்றும் 2008 காலகட்டங்களில் தமிழ் , முஸ்லிம் மாணவர்கள் குறைவாக தெரிவு செய்யப்பட்ட வேலைகளில் அப்போதைய தமிழ் மற்றும் சட்டவல்லுனர்களும், புத்திஜீவிகளும் சிறபான்மை மாணவர்களின் தொகையைக் கூட்டுவதற்கு குறைந்த பட்சம் இன வீதாசாரத்திற்கமைவாக எண்ணிக்கையை தருமாறு கோரியபோது அப்போதுள்ள பல முக்கியமான பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் அவ்வாறு செய்ய முடியாது- போட்டிப்பரீட்கையில் எவ்வளவுபேர் வேண்டுமானாலும் தெரிவு செய்யப்படுவதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்று கூறி தட்டிக்கழித்து விட்டனர்.
இவ்வாறு தட்டிக்கழித்த பின்னர் இப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது திறமையை வெளிக்காட்டும் விதத்தில் குறித்த பரீட்சைக்கு தம்மை முழுதாக ஈடுபடுத்தி தயாராகி தோற்றி அதிகப்படி மாணவர்கள் தற்போது தெரிவாகினர்.
இது இவ்வாறு இருக்க தற்போதைய மாணவர்களின் வெற்றியை சகிக்க முடியாத முன்பு போட்டிப் பரீட்சையில் போட்டி போட்டு வருமாறு கூறிய சட்டத்தரணிகள் இன்று தாம் கூறியதற்கு மாற்றமாக தற்போது செயற்பட்டு பிரச்சினைகளை கொடுப்பதுடன் பல இனவாத மதத் தலைவர்களையும், இனவாத கட்சிகளையும் தூண்டி விடுகின்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு திறமைகளைக்காட்டிய மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஆப்பு வைக்கும் இனவாதிகளுக்கு அரசு தகுந்த பாடத்தை புகட்டி சிறுபான்மை மக்களின் கல்வி, தொழில் வாய்புக்களில் அதீத கவனஞ் செலுத்த வேண்டுமென சிறுபான்மை மக்கள் அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றனர்.
திறமையுள்ளவர்கள் போட்டிப் பரீட்சைகளில் கூட கல்வியிலும் முன்னுக்கு வருவதை விரும்பாக இனவாதிகள் இருக்கும்போது நாட்டில் எவ்வாறு சாமதானம் ஏற்படும் ? என மக்கள் அரசிடம் கேட்கின்றனர்.
இலங்கையில் சமாதானம் நிலவுகிறது, மக்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி இருக்கின்றார்கள் என்று உலகத்திற்கு பறைசாற்றும் அரசு தமது சமாதான செயற்பாட்டிற்கு ஆப்பு வைக்கும் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளில் தலையிடும் இனவாதிகளுக்கு அரசு என்ன ஆப்பை வைக்கப்போகின்றது என மக்கள் கேட்கின்றனர்.
எனவே இந்த விடயத்தில் அரசும் அரச அதிகாரிகளும் உடன் தலையிட்டு சிறுபான்மையினரின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை தடுக்கும் வகையிலும் சிறுபான்மையினரின் சகல விடயங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களின் திறமைகளை ஏற்று அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இனவாதிகளின் இந்தச் செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துமாறு மக்கள் சிறபான்மை மக்கள் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது; உலமா சபை பகிரங்கப்படுத்த வேண்டும்!



HalalMubarakஇலங்கை மக்களில் 7 வீதமானோரே ஹலால் சான்றிதழுடைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்பதால் ஹலால் சான்றிதழை தடை செய்ய வேண்டும் என்பது பிழையானது என்றும் ஆனாலும் இதற்காக செலுத்தப்படும் பணம் எங்கே போய்ச்சேருகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளமையை முஸ்லிம் உலமா கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சில இனவாதிகள் ஹலால் சான்றிதழை தூக்கி பிடிப்பதற்கு அரச சார்பு இனவாதிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவரின் இது சம்பந்தமான கருத்து பாராட்டுக்குரியதாகும். ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது அந்த உணவை முஸ்லிம்கள் உண்ணலாமா இல்லையா என்பதற்கான உத்தரவாதம் மட்டும்தான் என்பதை அவர் விளங்கியுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
பொதுவாக இந்து, பௌத்த மக்களில் சிலர் உணவகங்களுக்கு சென்றால் அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு உறுதிப்படுத்துவதை அன்றாடம் நாம் காண்கிறோம். விமானங்களில் கூட அசைவமா சைவமா என கேட்ட பின்பே உணவை வழங்குகிறார்கள். இவ்வாறே ஒரு முஸ்லிம் தனக்குரிய உணவு ஹலாலா (ஆகுமானதா) இல்லையா என்பதற்கான உத்தரவாதமே இந்த ஹலால் பத்திரமாகும்.
இதனை எதிர்ப்பதன் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி இதன் மூலம் வாக்குகளை பெற சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அதேவேளை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹலால் சான்றிதழுக்கான வரவுகள் செலவுகள் எவ்வளவு என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற அதன் வருடாந்த மாநாட்டில் கூட உலமா சபையின் வரவு செலவு பற்றிய அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
அதேபோல் அதன் நிர்வாகமும் பல வருடங்களாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படவில்லை. சில அரசியல் கட்சிகள் போல் உலமா சபையும் சிலரின் ஏக போக சொத்தாகவும் ஆயுட்கால தலைவர், நிர்வாகம் என்ற நிலையே காணப்படுவது கவலைக்குரியதாகும் என்பதை உலமா கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளது. அவ்வப்போது நாம் பகிரங்கமாக வழங்கும் எமது ஆலோசனைகளை உலமா சபையின் நிர்வாகம் ஏற்காததன் காரணமாக இன்று முழு முஸ்லிம் சமூகமும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
உலமா சபையின் கணக்கு விபரம் என்பன அதன் உறுப்பினரான எமக்குக் கூட அதுவும் கல்முனை உலமா சபையின் உப தலைவரான எமக்கே தெரியாத நிலையில் மாற்று சகோதரர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? இதன் காரணமாக உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி என்ற வகையில் எம்மாலும் இனவாத கட்சிகளுக்கு பதில் அளிக்க முடியாதுள்ளது.
ஆகவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரையும், ஊடகங்களையும் உலமா சபை அழைத்து ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்தத்தெளிவு சரியானதா என்பதை தே.தே.இயக்கத் தலைவர் வாயிலாக ஊடகங்களுக்கு சொல்லப்பட வழி சமைக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது” என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

site counter