அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 31 டிசம்பர், 2012

முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள்; தலைமை கண்டுகொள்ளுமா?




Metro
-அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள் நேற்றை 24வது மாநாட்டில் அவர்கள் தலைமைத்துவத்துக்கும் உயர் பீடத்துக்கும் வேதனையில் தெரிவித்த விடயங்கள்
அக்கரைப்பற்று தவம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசு சுனாமியினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட அரசாங்கம் கடந்த 2 வருடமாக இழுத்தடிப்ப்பு செய்து வருகின்றது. இதற்காக கடந்த வாரம் அக்கரைப்பற்றில் ஒர் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டததிலாவது இப் பிரச்சினை பேசப்படுவதில்லை.
இதனைப் பற்றி பேசுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பிதலும் விடுக்கப்படுவதில்லை. அங்குள்ள நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளடக்கப்படுவதும்மில்லை.
அட்டாளைச்சேனையில் திவிநகுமு பட்டதாரிகளை நிரந்தர நியமணத்தின்போது நூற்றுக்கு நூறு வீதம் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நியமணம் வழங்கபட்பட்டது. இப்பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு பழிவாங்கள் நடைபெற்றது.
முஸ்லீம் காங்கிரஸ் நூற்றுக்கு நூறு வீத ஆதரவாளர்களைக் கொண்ட கிரமமான பாலமுனையைச் சோந்த ஒருவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் நியமணம் பெற்றுள்ளார். அவர் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் சேவையாற்றுகின்றார். அவரை கிழக்கு போக்குவரத்து சபைக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தார்.
ஆனால் அவர் வினயமாகக் கேட்டுக்கொண்ட விடயம் என்னவென்றால் ஒருபோதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லது அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எனக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். வேறு வழியில் முயற்சிக்கவும் என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்த அரசில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரையே சொல்லவேண்டாம் என கட்சியின் போராளி சொல்லக்கூடிய அளவுக்கு இந்தக் கட்சி போராளிகள் பழிவாங்கப்படுகின்றனர்.
திருக்கோவில் பொத்துவில் கரங்கோ, வாழைச்சேனைப் பகுதிகளில் முஸ்லீம்களின் நிலப்பிரச்சினைகள் இன்னும் தீர்ககப்படவில்லை. சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை முஸ்லீம் மாணவர்கள் கூடுதலாக சித்தியடைந்தாலும் அதனை முஸ்லீம் கங்கிரஸ் தலைவர் நீதியமைச்சராக இருந்தாலும் அவரது மண்டையில் இதனை போட்டு துவேசம் பேசுகின்றனர். என அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவம் தெரிவித்தார்.
முசாஜித் மௌலவி-வன்னி
இன்று மண்னார் போன்ற பகுதியில் வெள்ளம் மக்கள் பெரிதும் துண்பப்படுகின்றனர். இந்தத் தலைமைத்துவம் இங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றதா ? அம் மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததா?
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் மண்னார் சிறையில் வாடுகின்றார் அவாகளுக்காக ஒரு சட்டத்தரணியையாவது மண்ணார் நீதிமன்றத்துக்கு இந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் அனுப்பி வைத்ததா? அல்லது அவரது கையடக்கத் தொலைபேசியிலாவது பேசமுடியுமா ? ஆனால் இக் கட்சிசை ஆரம்பித்த மர்ஹூம் அஸ்ரபிற்காக நான் இறுதி வரை இக் கட்சியில் இருந்தே உயிர் துறப்பேன் எனக் கூறினார். இங்கு வெளிப்படையாக பேசுவதெல்லாம் இந்த தலைமைத்துவம் இதனைக் கேட்டு கட்சி போராளிகளது உள்ளக்குமுரல்களை உணர்ந்து தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன ஆக்ரோசமாக பேசினார்
நஜீம் – திருகோணமலை
திருகோணமலையில் மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அண்மையில் குச்சவலிப்பிரதேசத்தில் படாசாலை விடயமாக அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்பட்ட விடயத்தை விவரித்துக் கூறப்பட்டது. குச்சவெலிப் பிரதேசம் நூறுவீதம் முஸ்லீம் காங்கரஸ் ஆதரவாளர்கள் என்றதனால் நாங்கள் பழிவாங்கப்படுகின்றோம். இதற்காக முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சா ஆசனத்தில் நஜீப் மஜீதை அமர்த்தினீர்கள்.
புஞ்சிநிலமே பிரதியமைச்சர் திருமலையில் 3 சிங்களக் கிராமத்தினை உட்படுத்தி நகரசபையில் 53 உறுப்பினர்களாக கூட்டுவதற்கு சிங்களக் குடியேறறக் கிராமத்தை உறுவாக்கி வருகின்றார்.
1965ல் நீதிமன்றம் இருந்த காணியை தொல்பொருள் உள்ள பிரதேசம் என்ற போர்வையில் 9 அரை ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளனர். இப் பிரதேசத்தில் 1521ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் முஸ்லீம்கள் வாழ்ந்த பிரதேசத்தில் முஸ்லீம் பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுத்த வரலாறு உள்ளது.
எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் பல்வேறு எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. திருமலை மாவட்டத்திற்கு பிரதியமைச்சரோ அல்லது மாகாண அமைச்சோ முஸ்லீம் காங்கிரஸ் வழங்கவி;ல்லை.
இப்படி இந்த ராஜபக்ச அரசில் நாம் பழிவாங்கப்படுகின்றோம். நாம் தொடர்ந்து இந்த அரசில் இருப்பதா இல்லையா என்பதை தலைமைத்துவமும் அதி உயர்பீடமும் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
ஏ.எல்.எம் ஜப்பார் மரைக்கார் – புத்தளம்
புத்தளத்தில் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் செய்த சேவைக்குப் பிறகு அங்கு எவ்வித அபிவிருத்தியும் நடைபெறவில்லை. அஸ்ரப் சேர் அவர்கள் புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு ஒரு கட்டத்தினை நிர்மாணித்துக் கொடுத்தார். கட்சிக் கூட்டங்கள் மற்றும் தலைவர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து ஒரு சதமேனும் அப்பிரதேசத்துக்கு வழங்கப்படுவதுமில்லை என தெரிவித்தார்.
ஜலால்தீன் – சாய்ந்தமருது
வவுனியாவில் நடைபெற்ற பேராளர் மாநாட்டுக்குப்பிறகு 1 அரை வருடத்திற்குப் பிறகு இன்று இங்கு ஒன்று கூடியுள்ளோம். நாம் ஆகக் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது பேராளர் மாநாட்டை நாட்டின் பல்வேறு பிரதேசத்திற்கும் சென்று நடத்த வேண்டும். இங்கு குழுமியிருக்கின்ற ஒவ்வொருவரும் தமது மணக்குமுரல்களுட்ன் இங்கு வந்திருக்கின்றார்கள். நமது சமுகத்தின் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்ந்த பாடில்லை.
நளீம் – மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 ஆயிரம் வாக்குகளை எடுத்த முஸ்லீம் காங்கிரஸ் தற்பொழுது 8ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இக் கட்சி பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? அடிமட்ட போராளிகள் எல்லோரும் வெறுப்படைந்துள்ளார்கள்.
திவிநகும திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். கட்சியின் ஆதரவாளரது கடை எரிக்கப்பட்டது அதனை இந்த தலைமைத்துவம் வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுத்ததா?
ஆனால் என்னதான் சொன்னாலும் இந்தக் கை அந்த மரத்திற்கே வாக்களிகக் பழகிவிட்டது. இந்தக் கட்சியை யாராளும் அழிக்க முடியாது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இந்தக் கட்சியை நாம் வளர்த்து எடுத்தல் வேண்டும்.
றம்சி -கம்பஹா
கிழக்குப் பிறகு அடுத்து வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக மேல்மாகணததில் முஸ்லீம் காங்கிரஸ் திகழப்போகின்றது. அதற்காக களுத்துறை கம்பஹா கொழும்பு போன்ற மாவட்டத்தில் இரண்டாவது சக்தியாக முஸ்லீம் சமுகம் வாழ்ந்து வருகின்றது. அதற்காக கிழக்கு சகோதரர்களே நீங்கள் பொறுத்திருங்கள். கம்பஹா மாவட்டத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லீம் காங்கிரசின் அலட்சியத்தினாலேயே அத்தணகல்லை உள்ளுராட்சித் தேர்தலில் தேர்தல் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.
களுத்துறை பிரதிநிதி
இனத்துவேசம், முஸ்லீம்களது பள்ளி உடைப்பு போன்ற விடயங்களில் முஸ்லீம் காங்கிரசின் செயற்பாடு எனன? நீங்கள் எடுத்த தீர்மாணம் என்ன? பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க சரியா சட்டம் பற்றி பேசியதற்கு முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் யாராவது வாய்திறந்து பேசினீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter