அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 மார்ச், 2014

நிந்தவூரில்; தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.

நிந்தவூரில்;
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு நிந்தவூர்ப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்சிசிகள் ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
நிந்தவூர்ப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.தஸ்லிமா மஜீட் தலைமயிலான குழுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்> வைத்தியசாலைப் பணியாளர்கள்> பாடசாலை ஊழியர்கள்> பாடசாலை மாணவர்கள்> அதிபர்> ஆசிரியர்கள் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலகப் பணியாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டு>பங்களிப்புச் செய்தனர்.
அரச>தனியார்> பொது நிறுவனங்களைத் துப்பரவு செய்தல்> டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள்> தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான விழிப்பூட்டல் > போதைப் பொருள் ஒழிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இக்குழுவினரால்

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில்
கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
                 -மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதி-
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி;; கணனிப் பயிற்சி நிலையத்தில் ஒரு வருடப் பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர்  கே.கலாநிதி , நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் , கல்முனை வலய நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் ' இன்று உலகம் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதாகத் திகழும் கணனித் தொழில் நுட்பத்தை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்' எனத் தெரிவித்தார்.

நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள். -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-


நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்.
           -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டியொன்று நேற்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர்  ஏ.எம்.நசீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சீ.பைசால் காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகம்வுகளில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், சட்டத்தரணி ஏ.எம்.நசீல், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் இது போன்றதொரு விளையாட்டு விழா இதற்கு முன்னர் இடம் பெறாததால், இப்பிரதேச பொது மக்கள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள், அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் 'ஸபா', 'மர்வா' என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இறுதியில் 'மர்வா' இல்லம் முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

site counter