அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 மார்ச், 2014

நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள். -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-


நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்.
           -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டியொன்று நேற்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர்  ஏ.எம்.நசீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சீ.பைசால் காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகம்வுகளில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், சட்டத்தரணி ஏ.எம்.நசீல், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் இது போன்றதொரு விளையாட்டு விழா இதற்கு முன்னர் இடம் பெறாததால், இப்பிரதேச பொது மக்கள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள், அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் 'ஸபா', 'மர்வா' என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இறுதியில் 'மர்வா' இல்லம் முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ' இன்றைய நமது அரசாங்கம் ஒரு நல்ல விடயத்தைச் சொல்லியிருக்கிறது. இப்போது இங்கு இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை அவதானித்த பின்னரே இதைச் சொல்ல விளைகின்றேன். அரச விழாக்கள், வைபவங்களில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி, சுற்று நிருபம் அனுப்பியுள்ளது. இங்குள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த விடயத்தில் அக்கரை செலுத்த வேண்டும். நமது மொழி, நமது கலாச்சாரம், நமது பண்பாடுகள், நமது தனித்துவங்கள் அழிந்து போவதற்கு நாமே துணையாக ஒரு போதும் இருந்து விடலாகாது' எனத் தெரிவித்தார்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter