அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தொழில்வாய்ப்புகள் உள்ளன, ஆனால் தகுதியுடையவர்கள் இல்லை - கல்வியமைச்சர் பந்துல



உலகில் எந்தவொரு பிரிவினதும் விடுபட முடியாத 3 காரணங்கள் தொடர்பாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமகாலத்தில் வறிய நிலையில், கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழினுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர்.
ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.

அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்த கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் காலாவதியான மருந்து சாப்பிட்ட 16 பேர் வபாத் - 38 பேருக்கு தீவிர சிகிச்சை




பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகர மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்டவர்கள் மயக்கமடைந்தனர். அங்கு கடந்த புதனிலிருந்து விற்கப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்ட 54 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காலாவதியான மருந்தை விற்ற கடைக்காரரை போலீஸ் கைது செய்துள்ளது. லாகூரில் காலாவதியான மருந்தை சாப்பிட்டு, ஜனவரி மாதம் 100 பேரும், நவம்பர் மாதம் 19 பேரும் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 

சவூதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு - மன்னர் அப்துல்லாஹ் அறிவிப்பு


சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், தனியுரிமை மீறல் குற்றம் புரிந்தவர்களுக்கும், பெரிய குற்றங்களான கொலை, வன்புணர்வு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாடு இஸ்லாமிய மதநெறிப்படி ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. அச்சட்டப்படி, பொது உரிமைக் குற்றங்கள் , தனியுரிமைக்   குற்றங்கள் என்று இருவகையாக குற்றங்கள் பகுக்கப்படுகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரே  மன்னிக்கத் தகுதியானவர் என்பதால் அத்தகு குற்றங்கள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் வராது  என்றும் கூறப்பட்டுள்ளது.

காட்டாக, போக்குவரத்துக் குற்றங்களில் அரசு சார்பில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டாலும், அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அடைந்த கைதிகள் இதனை படிப்பினையாகக் கொண்டு  குற்றங் களைந்தவர்களாக தேசத்திற்கும், பண்பாட்டிற்கும்  இனி பாடுபட முன்வர வேண்டும்  என்று இளவரசர் முஹம்மது கேட்டுக்கொண்டுள்ளார். inneram

Jaffnamuslim
 

சுயகெளரவத்தையும், கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்க்கு நாங்கள் தயாராக இல்லை - ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)




(முஸ்லிம் காங்கிரஸின் ஊடக பிரிவு)

கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப்பரீட்சை நடைபெற போகின்றது, அந்த அக்கினிப்பரீட்சைக்கு எப்படி முகம் கொடுப்பது.? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு, தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் சனிக்கிழமை (29.12.2012) நடைபெற்ற போது அதன் இரண்டாவது அமர்வின் இறுதியில் முக்கிய உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலைவரின் உரையின் பெரும் பகுதி பேராளர்கள் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது. அங்கு உரையாற்றும்பொழுது தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இன்று பிரேரணைகளையும் நாம் நிறைவேற்றி இருக்கிறோம், அந்த பிரேரணைக்கமைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகிய நாம் எட்டுப்பேரும் அந்த அக்கினிப்பரீட்சையை எதிர் கொள்ள இருக்கிறோம். என்ன சட்டமூலமாக இருந்தாலும் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருகிறோம் ஏற்கனவே மாகாணசபையில் அந்த அனுபவம் ஏற்பட்டது.

இதனை கட்சியின் போராளிகள் வழி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிய அதியுயர் பீடத்துக்கு இருக்கின்ற முதலாவது பணி அக்கினிப்பரீட்சையை எதிர் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதாகும். அந்த தீர்மானத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக எமது உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியானது.

முஸ்லிம் காங்கிரசை தாம் விரும்பிய திக்கில் இழுத்துக்கொண்டு போகலாம் என சில பத்திரிகைகள் நினைக்கின்றன அவர்களது தேவைகளுக்கமைவாக எமது கட்சி செல்ல முடியாது. நாம் பிரயோக அரசியலைச் செய்கிறோம். ஆனால் கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாத ஒரு முக்கியமான சவாலை நாம் முதலில் எதிர் நோக்கியிருக்கிறோம், எனவேதான் இந்த பேராளர்மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

அரசாங்கத்தோடு நாம் சில முக்கிய விடயங்களை கதைத்திருக்கிறோம், அரசமேல் மட்ட அமைச்சர்கள் சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள் அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவரே அடுத்த சில நாட்களில் எங்கள் வாக்குகளை பாராளுமன்றத்தில் எதிர்பார்த்து இருக்கிறார், நாங்கள் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்க்கு முக்கியமானது.

நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்ற இயக்கத்தினர் என்ற காரணத்தினால் பழிவாங்கப்படுகிறோம்.நாங்கள் இரண்டரக் கலந்து, சங்கமமாகாத கட்சியின்ர் என்ற காரணத்தினால் ஓரக்கண்ணால் பார்க்கப்படுகிறோம்.

எங்களது போராளிகள் நாளும் பொழுதும் இதற்க்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்,பட்டதாரிகள் நியமனம்கள் போன்ற வற்றில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.

கிழக்குமாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இங்கு சிலர் கூறியவற்றை கேட்கும் பொழுது அவரைப்பற்றி மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது,  எங்களுக்கு குறிப்பாக எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பதுவேறு விசயம். ஆனால் என்னவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அமைச்சராக இருக்க முடியும் இதனை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு விட்டு போகமாட்டோம், அதற்க்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் தரவில்லை ஆனால் எங்களது சுய கெளரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்க்கு நாங்கள் தயாராக இல்லை.என்றார்

 இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத்,செயலாளர்நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி, பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், பேராளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








site counter