அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 2 டிசம்பர், 2013

நிந்தவூரில் படையினருக்கும் பொது மக்களுக்குமிடையிலான முறுகலினை வெறும் அரசியலாக மாற்றுவதற்கு பெரும் தேசிய கடும் போக்குவாதிகள் முயற்சிப்பதில் நின்றும் விடுபட வேண்டும். -ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி எச்சரிக்கை-

            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நிந்தவூரில் படையினருக்கும், பொது மக்களுக்குமிடையிலரன முறுகலின் போது ஏற்பட்ட மக்களது உணர்வுகளையும், அவர்களது நியாயமான வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ளாது, வெறுமனே எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடும், சந்தேகப் பார்வையோடும் நோக்குவதிலிருந்து இந்நாட்டிலுள்ள பெரும் தேசிய கடும் போக்கு வாதிகள் விலகிக் கொள்ள வேண்டும்' என ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்:-



நிந்தவூர் பிரதேச செயலகத்தில் வைத்து பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸ் தரப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு சில இனவாதக் கட்சிகள் ஏற்கனவே தூபமிடத் தொடங்கியிருப்பதை ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம், ஒழுங்கு என்பவற்றிற்கு அமைவாக பொறுமையுடன், பலவிதமான நெருக்குதல்களுக்கு உணர்ச்சி வசப்படாமல், நிம்மதியாகப் பெருந்தன்மையுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்திற்கிடையில் வீணான பிரச்சினைகளைத் தோற்றுவிப்பவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கும், சமாதான சூழலிற்கும் குந்தகம் விளைவிப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, நிந்தவூர் மக்களின் அமைதியைக் குலைத்தவர்களாகக் காணப்பட்ட நிலையில், நிந்தவூரில் வைத்துக் கைது செய்யப்பட்ட படையினர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை, வெளிவராத வரையில் மக்களது மனங்களிலுள்ள சஞ்சலங்கள், சந்தேகங்களை இல்லாமல் செய்வது கடினமாகும்.
நிந்தவூரில் நடைபெற்ற அசம்பாவிதங்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அரச உயர் மட்டத்துடனும், பாதுகாப்பு தரப்பு உயர் மட்டத்துடனும் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றது. எனவே, எந்தவிதமான வீண் பிரச்சினைகளுக்குள்ளும் மாட்டிக் கொள்ளாது, மிகவும் நிதானமாக சகல தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக் கொள்கின்றது.
முஸ்லிம்களுக்கும், ஏனைய சமூகங்களுக்குமிடையில் முரண்பபாடுகளைத் தோற்றுவிப்பதற்கு சில இனவாதக் கட்சிகள் தொடர்ந்தேற்;சியாகக் கட்டவிழ்த்து விடும் சதிவலையில் மாட்டிக் கொள்ளாமல் மிகவும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் சகல தரப்பினரையும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter