அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 2 டிசம்பர், 2013

கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத மாமனிதராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். - ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி புகழாரம் -


               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நம் நாட்டுக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதில் நமது ஜனாதிபதி மிகவும் அக்கரையோடு செயற்பட்டு வருகின்றார். இதனால் நமது நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு மாமனிதராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார்' என்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளருமான எம்.பி.எம்.மாஹிரின் மூன்று இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டு விழா சனியன்று கொழும்பு, வெள்ளவத்தை மெரின் கிரான்ட் பென்கிற் ஹோலில் இடம் பெற்றது.
அகில இலங்கை றபியத்துல் தரீக்கா அசோசியேஷனின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய செய்யத் முஹம்மட் யூ.பி.ஆஸீக் தங்கள் றிபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.கா. தலைவரும், நீதியமைடச்சருமான ரவூப் ஹக்கீம், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத், மேல் மாகாண ஆளுனர் அஸ்செய்யித் அலவி மௌலானா, டாக்டர்.எம்.ஏ.எம்.சுக்ரி, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப் பீடாதிபதி டாக்டர்.குலாம் தஸ்தக்கீர், ஈரானின் இலங்கைக்கான தூதுவர் நபி போத் முஹம்மத் ஆகியோரும் , மேலும் பல எழுத்தாளர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், அறிவாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்தும் இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர்:-
நமது நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எமது கலைஞர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே தாமரைத் தடாகம் கலையரங்கமும் உருவாக்கப்பட்டது.

- 02 -
இதுமாத்திரமின்றி நடந்து முடிந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டு நிகழ்சிகளிலும், தேசத்திற்கு மகுடம் தேசிய நிகழ்சிகளிலும் நமது நாட்டுக் கலைஞர்களின் கலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
இந்த வரிசையில் இன்று மூன்று இஸ்லாமிய நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிந்தனை புகழ் எம்.பி.எம்.மாஹீர் உலக வாழ்முஸ்லிம்களினால் போற்றப்பட வேண்டிய ஒருவர்.
அவர் இன்று வெளியிடும் மூன்று நூல்களும் சாதாரணமானவை அல்ல. உலக மக்களை சுவர்க்கத்தின் பால் அழைத்துச் செல்லக் கூடிய புனிதமான நூல்களாகும்.
இதற்காக நான் அவருக்கு 'நற்சிந்தனாதிபதி' எனும் பட்டத்தை வழங்கி கௌரவிக்கின்றேன் எனக் கூறி, எம்.பி.எம்.மாஹிருக்குப் பொன்னாடையும் போற்றி கௌரவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter