( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரி.ஏ.நிசாம் நேற்று நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அடி மட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் க.பொ.த(சா/த) மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.
இதே வேளை சில ஆசிரியர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பான, தெளிவான விளக்கங்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக