அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 2 நவம்பர், 2013

எயர் அராபிய விமானத்தில் குழந்தை பிரசவித்த இலங்கை பெண் (வீடியோ இணைப்பு)

துபாயிலிருந்து இலங்கையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த சம்பவமொன்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது 

விமானத்தை அவசரமாக ஓமானில் தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்ததாம்.

துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப் பெண், இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில் ஏற்பட்ட பிரசவ வலி ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள்  மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர் அருகில் இருந்துள்ளனர்.  


Source:Jaffna Muslim

நிந்தவூரில் கல்முனை வலய சுற்றாடல் பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வு. -கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் பிரதம அதிதி-

         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளில் உருவாக்கப்பட்ட சுற்றாடற் கழகங்களின்  பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வொன்று இன்று (01) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

கல்முனைக் கல்வி வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

site counter