அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 2 நவம்பர், 2013

நிந்தவூரில் கல்முனை வலய சுற்றாடல் பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வு. -கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் பிரதம அதிதி-

         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளில் உருவாக்கப்பட்ட சுற்றாடற் கழகங்களின்  பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வொன்று இன்று (01) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

கல்முனைக் கல்வி வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


கிழக்கு மாகாண சுற்றாடல் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், மாவட்ட சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரிகளான எஸ்.உதயகுமார், எம்.ஐ.எம்.இஸ்ஷாக், கிழக்கு மாகாண முகாமைத்துவ நிதி அதிகாரி எம்.துஷ்யந்தன் கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, முன்னாள் கல்விக் கல்லூரி விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.முஸ்தபா
ஆகியோர் கௌரவ அதிகாரிகளாகவும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இங்கு உரை நிகழ்த்துகையில் 'நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனையில் உருவான பல திட்டங்களில் சுற்றாடல் கழகங்களை உருவாக்கி, அதன் மூலம் மனித வர்க்கத்தையும், உலகையும் பாதுகாக்க அவர் முயற்சித்திருப்பது பெரும் பாராட்டத்தக்க விடயமாகும். இச்செயற் திட்டத்தை பாடசாலைச் சமூகத்தினருடாக எடுத்துச் செல்லும் பொறுப்பு எமது செயலகத்திற்குரியது. இதனை வெற்றியடையச் செய்யும் முயற்சியில் நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter