மஹிந்த சிந்தனையில்
மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நெல்வயல்களில் மூன்றாம் போகப் பயிர் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை இன்று (29)நிந்தவூர் , மாட்டுப்பளைக் கண்டத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.எச்.ஏ.நிஹார் தலைமையில் இடம் பெற்ற இவ்வறுவடை நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் பிரதேச கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், பாலமுனை மாவட்ட பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் எம்.ஐ.எம்.நியாஸ், அம்பாரை மாவட்ட உதவி
விவசாயப் பணிப்பாளர்களான பி. முத்துக் குமாரண, எம்.எப்.ஏ.சனீர், எம்.ஜெமீல் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பாசிப்பயறு செய்கைக்குரிய நிலச் சொந்தக் காரரும், விவசாயியுமான முகம்மட் தம்பி அலி சப்றி இங்கு கருத்து வெளியிடுகையில் ' நான் எனக்குச் சொந்தமான நிலத்தில் இரு போகங்கள் நெல் உற்பத்தி செய்து வெற்றி கண்டேன். மூன்றாம் போகமாக 'நமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' திட்டத்தில் கவரப்பட்டு, மாற்றுப் பயிர்ச் செய்கையாக பாசிப்பயறை பயிரிட்டு, அறுவடை செய்தேன். அல்லாவின் உதவியால் இன்று செய்த அறுவடையில் தேறிய இலாபமாக மூபாய் 70 ஆயிரத்தைப் பெற்றுள்ளேன். இதற்கு உதவிய இறைவனுக்கும், சிந்தனையைத் தந்த ஜனாதிபதியிற்கும், ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்கிய விவசாயப் போதனாசிரியர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள விவசாயப் போதானாசிரியர்கள், கமநல சேவைகள் உத்தியோகத்தர்கள், நீர்பாசன உத்தியோகத்தர்கள், விவசாயிகள், போடிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

விவசாயப் பணிப்பாளர்களான பி. முத்துக் குமாரண, எம்.எப்.ஏ.சனீர், எம்.ஜெமீல் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பாசிப்பயறு செய்கைக்குரிய நிலச் சொந்தக் காரரும், விவசாயியுமான முகம்மட் தம்பி அலி சப்றி இங்கு கருத்து வெளியிடுகையில் ' நான் எனக்குச் சொந்தமான நிலத்தில் இரு போகங்கள் நெல் உற்பத்தி செய்து வெற்றி கண்டேன். மூன்றாம் போகமாக 'நமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' திட்டத்தில் கவரப்பட்டு, மாற்றுப் பயிர்ச் செய்கையாக பாசிப்பயறை பயிரிட்டு, அறுவடை செய்தேன். அல்லாவின் உதவியால் இன்று செய்த அறுவடையில் தேறிய இலாபமாக மூபாய் 70 ஆயிரத்தைப் பெற்றுள்ளேன். இதற்கு உதவிய இறைவனுக்கும், சிந்தனையைத் தந்த ஜனாதிபதியிற்கும், ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்கிய விவசாயப் போதனாசிரியர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள விவசாயப் போதானாசிரியர்கள், கமநல சேவைகள் உத்தியோகத்தர்கள், நீர்பாசன உத்தியோகத்தர்கள், விவசாயிகள், போடிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக