அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 19 மே, 2013

அம்பாறை மாவட்டத்தில் (சா.த) சித்தியடையாத இளைஞர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வுகள் - இம்மாத இறுதியில் இடம்பெறும்

(ஏ.எல். நிப்றாஸ்)
க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறிய மற்றும் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளை தொழிற்பயிற்சி கற்கைளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விழிப்பூட்டல் செயமர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் இலங்கை மனித வள அபிவிருத்தி மன்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூhயில் இம்மாதம் 29ஆம் திகதி புதன் கிழமையும், சிங்கள மொழிமூல இளைஞர்களுக்கான செயலமர்வு அம்பாறை நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சாதாரண தரம் சித்தியடையத் தவறுகின்ற இளைஞர்கள் தமது எதிர்காலம் சூனியமாகி விடுவதாக எண்ணுகின்றனர். சமூகமும் அவர்களை பயனற்றவர்களாகவே நோக்குகின்றது. ஆனால் இவ்வாறானவர்கள் என்.வி.கியு. எனப்படும் தேசிய தொழில்சார் தகமை அப்படையில் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை தொடர்வதன் ஊடாக ஒரு பட்டதாரிக்கு சமமான தகுதியுடன் தொழிற்சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துவது அவசியமானது. அதேபோன்று, தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கும் முறையான வழிகாட்டல் அவசியமாகின்றது.
எனவே இதனைக் கருத்திற்கொண்டே தேசிய மனிதவள அபிவிருத்தி மன்றமானது திறனபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் ஏனைய தொழில்சார், தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த செயலமர்வுகளை பிரமாண்டமான முறையில் நடாத்தி வருகின்றது.
ஏற்கனவே திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான செயலமர்கள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், அம்பாறை மாவட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்விரு செயலமர்வுகளிலும் 1500 முதல் 2000 வரையான இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களம், தேசிய தொழில் பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, மனிதவள அபிவிருத்தி மன்றம், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் சேவைகள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படும்.




site counter