அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2012

ஆஷா போஸ்லேயின் மகள் தற்கொலை


பிரபல பாடகியான ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா (வயது 56) நேற்று திங்கட்கிழமை காலை தனது வீட்டில் வைத்து தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


வர்ஷா தனது வரவேற்பறையிலிருந்த சோபாவில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை போஸ்லேயின் சாரதி மு.ப. 10.30 மணியளவில் கண்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தற்கொலை குறிப்பேதும் காணப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ஜிய தயாரிப்பான கைத்துப்பாக்கி யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டதென கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில ஹிந்தி மற்றும் மராட்டியப் படங்களில் பாடியுள்ள வர்ஷா, 1998, 2008ஆம் ஆண்டுகளிலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆஷா போஸ்லேயின் 3 பிள்ளைகளில் 2ஆவதான இவர் சில சஞ்சிகைகளிலும் வலையமைப்புகளிலும் எழுதியுள்ளார். விளையாட்டு பத்தி எழுதும் பத்திரிகையாளரான இவர் திருமணம் செய்துள்ள போதிலும் கடந்த 1998இல் மணமுறிவை ஏற்படுத்திக் கொண்டார். (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

உலகின் மிகவும் வயதான நபரான 132 வயது பெண் மரணம்



உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெருமையைப் பெற்ற ஜோர்ஜியாவைச் சேர்ந்த அன்டிசா கிவிசாவா தனது 132ஆவது வயதில் உயிரிழந்தார்.

ஜோர்ஜியாவில் சசினோ என்ற மலைக் கிராமத்தில் பிறந்த அன்டிசா, உலகிலேயே வாழ்ந்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

இவர் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி பிறந்த இவர், தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். அவர் தனது 85 வயது வரை தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலை செய்து வந்தார்.

தனது வாழ்நாளில் இவர் 2 உலக போர்களையும், ரஷயப் புரட்சியையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை பற்றிய கோவைகள் இரகசிய பட்டியலிலிருந்து நீக்கும் வேலை


இலங்கை அடங்கலாக பல நாடுகள் தொடர்பான இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் வேலைகள் நடப்பதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளதாக பி.ரி.ஐ. சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு ஏற்கெனவே 70,000 கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் பாகிஸ்தான், ஈரான், இலங்கை, யூரேஷியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகள் தொடர்பான கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் பெரியதொரு செயல்த்;திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் பினக் சக்ரவர்த்தி கூறினார்.

அணு தொழில்நுட்பம் மற்றும் அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடொன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

உலகிலுள்ள அணுவாயுதங்கள் யாவும் அழிக்கப்படும்வரை பாதுகாப்புக்காக அணுவாயுதங்களை வைத்திருக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டெனவும் அவர் கூறினார்.

அணு தொழில்நுட்பம் தொடர்பான சில  கோவைகளும் இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றனவெனவும் அவர் கூறினார். 

இலங்கைத் தமிழரை அகதிகளாக நடத்தாமல் அதிதிகளாக நடத்துங்கள்: கவிஞர் வைரமுத்து



இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள தமிழர்களை அகதிகளாக நடத்த வேண்டாம். அவர்களை அதிதிகளாக நடத்த வேண்டும் என்று கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளின் அவலங்களைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் 'நீர்ப்பறவை'. இத்திரைப்;படத்தில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல் தொடர்பிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து.
விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் பேசுகையில்,

'இந்த திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டுப்போகிறது. இலங்கை கடலில் படகுக்குள் சுடப்பட்டுக் கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலிலேயே அனாதையாகிறான். பின்னர் அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை.

இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில், 'மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால் மண்ணகம் அதை மறுப்பதில்லை, இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும் இங்கு யாரும் அகதியில்லை' என்று கூறியுள்ளேன்.

தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்ல வேண்டாம்.  அவர்களை இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும். திரும்பிப் போய்விடுபவர்கள் அவர்கள்.

எனவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றார். (தற்ஸ்தமிழ்) 

படகு மூலம் ஆஸி செல்ல முற்பட்ட 112பேர் சிலாபத்தில் கைது



சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 112பேரை சிலாபம் கடற்பரப்பில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முகத்துவாரம் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..


சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்


மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியது உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம்!


உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் என்பன பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படு நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலங்கள் வாக்களிப்பின்றி ஏகமனதாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
UNP TNA JVP உட்பட எதிர்க் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

site counter