அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2012

இலங்கைத் தமிழரை அகதிகளாக நடத்தாமல் அதிதிகளாக நடத்துங்கள்: கவிஞர் வைரமுத்து



இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள தமிழர்களை அகதிகளாக நடத்த வேண்டாம். அவர்களை அதிதிகளாக நடத்த வேண்டும் என்று கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளின் அவலங்களைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் 'நீர்ப்பறவை'. இத்திரைப்;படத்தில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல் தொடர்பிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து.
விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் பேசுகையில்,

'இந்த திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டுப்போகிறது. இலங்கை கடலில் படகுக்குள் சுடப்பட்டுக் கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலிலேயே அனாதையாகிறான். பின்னர் அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை.

இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில், 'மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால் மண்ணகம் அதை மறுப்பதில்லை, இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும் இங்கு யாரும் அகதியில்லை' என்று கூறியுள்ளேன்.

தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்ல வேண்டாம்.  அவர்களை இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும். திரும்பிப் போய்விடுபவர்கள் அவர்கள்.

எனவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றார். (தற்ஸ்தமிழ்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter