அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 6 மே, 2013

அம்பாரை மாவட்ட நெல் உற்பத்தியிற்கு ரூபாய் 24 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் திட்டம். – நிந்தவூரில் விவசாயிகள் மாநாடு---


அம்பாரை மாவட்ட நெல் உற்பத்தியிற்கு ரூபாய் 24 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் திட்டம்.                              
– நிந்தவூரில் விவசாயிகள் மாநாடு---    
                                                                                                           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்தின் நிந்தவூர்ப் பிரதேச நெல் உற்பத்தியை ஊக்குவித்து, அதன் மூலம் அதிக விளைச்சலைப் பெறுவது மட்டுமென்றி, மின்சார உற்பத்தி, அரிசி , மாவு, பிஸ்கட், விநாகிரி போன்ற பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டமொன்று நிந்தவூரில் நடைமுறைப்ப படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக ஆராயும் விவசாயிகளுக்கான விசேட மாநாடொன்று நேற்று (2013.05.03) நிந்தவூர் ,அட்டப்பள்ளம் தோம்புக்கண்டம் விலேஜ் றிசோட்டில் இடம் பெற்றது.
முன்னாள் அம்பாரை மாவட்ட விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.லத்தீப் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஹயறு குறூப் கம்பனியின் தலைவர் இஸட்.எம்.ஹயறு (பொறியிலாளர்) அதிதியாகக் கலந்து கொண்டு, ' இப்பிரதேச அரிசி உற்பத்திக்காக ரூபாய் 24 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் அம்பாரை மாவட்டத்தின் நெல் உற்பத்தியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, சந்தை வசதிகள், நவீன தொழிநுட்ப மாற்றங்கள்,  அதிக வருமானம், மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கை உருவாகுதல் போன்ற சிறப்புக்களைக் காண முடியும்' எனத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபை உபதவிசாளருமான எம்.எம்.எம்.அன்சார், நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.எம்.இஸ்மாயில், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி ஏ.எம்.ஜாபீர், மற்றும் கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் மிக சிறப்பாக இடம் பெற்றது.


நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் மிக சிறப்பாக இடம் பெற்றது.
         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான இரண்டாவது தேர்தல் இன்று (04.05.2013) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சம்மாந்துறைப் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிக விறுவிறுப்பாக இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், அம்பாரை மாவட்ட பதிவாளர் இஸட்.எம்.நசுறுதீன், கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிஸாம் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் இத்தேர்தல் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
இத்தேர்தலில் நிந்தவூர்ப் பிரதேசம் சார்பாக சுலைமான் ஸாபி, மீரான் முகம்மது சாஜித் ஆகிய இரு இளைஞர் வேட்பாளர்களும் களத்தில் குதித்திருந்தனர்.
இவர்களை ஆதரித்து வாக்களிப்பதற்காக இளைஞர்களும், பாடசாலை மாணவர்களும் முண்டியடித்துக் கொண்டு, வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
பாடசாலை இளைஞர்,யுவதிகளும் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் அழைத்து வரப்பட்டு, பாராளுமன்றத் தேர்தல் போன்று வாக்களிப்பு இடம் பெற்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.
Visual: 2th Youth Parliament Eletion Votting.
ampara rafeek.








site counter