அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 13 டிசம்பர், 2012

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி

asteroid--

நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் அவாதானிக்கப்பட்டதாக பொது மக்களால் கூறப்படும் ஒளிப்பிழம்பு அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
வடமத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்ட ஒளிப்பிழம்பு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் விங் கொமாண்டர் சிராஜ் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரையில் குறித்த ஒளிப்பிழம்பினை விமானப்படையினர் காணவில்லை. எனினும் அவ்வொளிப்பிழம்பைக் கண்டுபிடிக்கும் பொருட்டு நாட்டின் வான்பரப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கும் விஷேட திட்டமொன்றினை விமானப்படையினர் தற்போது நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன்படி 24 மணிநேரமும் நாட்டின் வான்பரப்பு முழுமையாக அவதானிக்கப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்று இது தொடர்பில் ஆராய்ந்து வருவருகிறது.அனேகமாக இதுவொரு கோளாக இருக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒளிப்பிழம்பொன்று மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகக் கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகும். அத்துடன் இது தொடர்பில் விமானப்படையினர் அவாதினித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.

கண்டி விவசாய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுக்கு சாப்பாட்டுடன் பன்றி இறைச்சி?


Fog Beef for Muslim Students in Kandy
கண்டி - குண்டசாலை விவசாய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காது சாப்பாட்டுடன் பன்றி இறைச்சி வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் இவ்விவசாயக் கல்லூரியில் பன்றி இறைச்சி சமைத்துக் கொடுக்கப்படுவதானது முஸ்லிம் மாணவர்களிடத்தில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
சாப்பாட்டுடன் தமக்கு பன்றி இறைச்சி வழங்கப்பட்ட விவகாரத்தை முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அதற்கு அலட்சியமாக பதில் வழங்கியுள்ளார் கல்லூரி முதல்வர்.
பன்றி இறைச்சி சமைக்கப்பட்ட காலங்களில் முஸ்லிம் மாணவர்கள் பன்றி கறி சாப்பிடுமாறும், இல்லாதவிடத்து வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுமாறும் கல்லூரி முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு தொடர்ந்தும் பன்றி கறி தொடர்பில் முறைப்பாடு செய்யவே, அங்கு பன்றி இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பன்றி இறைச்சி கறி வெளியிலிருந்து தருவிக்கப்படுகிறது.
இவ்வருடம் கல்லூரி உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகையில் பன்றி இறைச்சிக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளத்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்தாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
-Madawala News-

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப்பெண்களில் 16 பேர் வைத்தியசாலையில்


அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களில் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்கள் நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இது குறித்து பெண்களின் பெற்றோர் மூலம்தான் தகவல் அறிந்துகொண்டதாகவும் அதன்படி நேற்று பகல் அவர்களை பார்வையிட கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற போது வைத்தியசாலைக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவர்களை பார்வையிட தன்னை அனுமதிக்காமை வருத்தமளிப்பதாகவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்
.

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட மு.கா. தயார்



அரசியல் அமைப்பிலிருந்து 13ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய அனுமதிக்க முடியாது. இதற்கான ஆளும்கட்சியின் குறிப்பிட்ட சிலரின் முயற்சிகளைக் கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி முதலில் கண்டித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். எனவே தொடர்ந்தும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம் என முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. ஹசன் அலி தெரிவித்தார்.


ஆளும்கட்சியின் 31 உறுப்பினர்களும் கைச்சாத்திட்ட மகஜரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையெழுத்திட்டு 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் போது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம் காங்கிரஸை தவறாக நினைத்து விடுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரியை கொலை செய்த நால்வருக்கு மரணத் தண்டனை


பொலிஸ் அதிகாரியை கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2008 நவம்பர் மாதம் சட்ட விரோதமாக மேற்கொண்ட மது உற்பத்தி தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்கு சென்றிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நபர்களுக்கு மரணத்தண்டனை வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
.

சாதித்து காட்டியது வடகொரியா



வடகொரியா இன்று 12-12-2012 காலை உன்ஹா-3 என்ற நீண்ட தூர ராக்கெட் ஒன்றை ஏவியது. அந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைகோள், விண்ணின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்தது என்றும் வடகொரியா கூறியுள்ளது. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை ஏற்கனவே வடகொரியா மேற்கொண்டது. இதை தொடர்ந்து, வடகொரியாவின் இரண்டாவது அனுஆயுத சோதனைக்கு ஐ.நா. எதிர்ப்பும் தெரிவித்து இருந்தது.

இப்பிராந்தியத்தில் ஏவுகணை சோதனை செய்து வடகொரியா பயமுறுத்தி வருவது, மிகவும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது என்று அமெரிக்க எச்சரித்துள்ளது.  ஜப்பானும் இதுகுறித்து அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கொரியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது பற்றி அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

site counter