அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

'மகள் நிச்சயம் திரும்பி வருவாள்' - றிசானாவின் தாயார் நம்பிக்கையுடன் தெரிவிப்பு


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகள் இந்த மாதத்திற்கிடையில் வீடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக றிசானாவின் தாயார் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தகவல் தருகையில்,

நேற்று ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் ஒரு முஸ்லிம் எம்.பி. எமக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார். சவூதி மன்னருக்கு தற்போது சுகமில்லையென்றும், அதன்பொருட்டு சவூதியில் சிறைவைக்கப்பட்டுள்ள சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படுபவர் பட்டியலில் எனது மகள் றிசானாவும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார். 100 சதவீதம் அவள் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது இலங்கை சட்டமா அதிபரும் சவூதி சென்றுள்ளார். இந்நிலையில் எனது மகள் வீடு திருப்புவாள் என்று நான் நம்புகிறேன். அவள் 7 வருடங்களும், 7 மாதங்களும் சிறையில் இருந்துள்ளாள். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். எங்கள் மகள் எங்களிடம் வந்துசேர்ந்தாள் அதுவே போதும எனவும் றிசானாவின் தாயார் மேலும் கூறினார். 

றோசி நீ என்னே அழகு; உன் பேரழகால் எனக்கேற்படுகின்ற உணர்வுகளை எப்படி சொல்வேன்; பாராளுமன்றில் மயங்கினார் அமைச்சர் வெல்கம!


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றோசி சேனாநாயக்கா, மயக்கும் வசீகரமும் பேரழகும் கொண்டவர். அவர் பற்றிய தனது உணர்வுகளை விபரிக்க தன்னிடம் வார்த்தைகள் இல்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாய்மூலமான வினாக்களுக்கான நேரத்தின் போது றோசி சேனாநாயக்கா எம்.பி. அமைச்சர் குமார வெல்கமவிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘அழகு ராணியான றோசி சேனாநாயக்காவின் கேள்விக்கு பதிலளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு வசீகரமான பெண். என் உணர்வுகளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை’ என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, அமைச்சர் வெல்கமவின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
‘எனது உணர்வுகளை இங்கு விளக்க முடியாது. நீங்கள் வெளியே வந்து என்னை சந்தித்தால் நான் அதை விபரிப்பேன்’ என காமினி ஜயவிக்கிரம பெரேராவை பார்த்து அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட றோசி சேனாநாயக்கா எம்.பி ‘ஒரு பெண் என்ற வகையில் தனது வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அமைச்சர் கருத்து கூறியிருக்கக் கூடாது. நான் இதை அவமானமாக கருதுகிறேன். எனது பெண்மை பற்றியும் வெளித் தோற்றம் பற்றியும் அமைச்சர் பேசியிருக்கக் கூடாது’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம ‘நான் பெண்களை அவமானப்படுத்த மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்’ என கூறியவாறே அவர் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என மு.கா. கூறுவது பதவிகளுக்காக வீசப்படும் வலையே!


13வது திருத்த சட்டத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது தனிப்பட்ட சில பதவிகளுக்காக வீசப்படும் வலையாகும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சமூக நலன் பற்றிய எந்த வித நிபந்தனையுமின்றி 18வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காஙகிரஸ், அமைச்சுப் பதவிகளுக்காக எந்த வித நிபந்தனையுமின்றி கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு முட்டுக் கொடுத்த அக்கட்சி, பதவிகள் பறிபோய் விடும் என அச்சப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அக்கட்சி, 13வது திருத்தத்தை நீக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுவதை எவராவது நம்பினால் அவர் உலக மகா முட்டாள் என்பதுதான் அர்த்தம்.
13வது சட்ட மூலத்தை திருத்த அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சியினர் கூறுவதன் மூலம் ‘ஏதாவது’ தந்தால் ஆதரிப்போம் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்டுள்ளது என்பது அரசியல் அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.
இது பற்றி அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியள்ளார். முஸ்லிம் காங்கிரசுக்கு எதனை கொடுத்தால் வாலாட்டிக் கொண்டே இருப்பார்கள் என்பது அரசியல் சாணக்கியமிக்க ஜனாதிபதிக்குத் தெரியாதா?
இக்கட்சியினர் நினைத்தால் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து இது பற்றி பேசி தீர்க்கமான உத்தரவாதங்களை பெற முடியும. அதனை விடுத்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி விட்டு அதனை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்றால் இதன் மூலம் இவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற முனைகிறார்கள் என்பது தெளிவாக தெரிவதனால்த் தான் நாம் இதனை சுட்டிக்காட்டி பேச வேண்டியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதா இல்லையா என்ற கேள்வி நாடாளுமன்றத்துக்கு வந்தால் நிச்சயம் முஸ்லிம் காங்கிரசும், ஏனைய அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளும் நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். இவற்றின் மூலம் மு.கா. உட்பட அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் மூலம் சமூகம் உரிமைகளை பெறுவதற்கு பதிலாக இருப்பதையும் இழந்து வரும் நிலைதான் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

site counter