அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

றோசி நீ என்னே அழகு; உன் பேரழகால் எனக்கேற்படுகின்ற உணர்வுகளை எப்படி சொல்வேன்; பாராளுமன்றில் மயங்கினார் அமைச்சர் வெல்கம!


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றோசி சேனாநாயக்கா, மயக்கும் வசீகரமும் பேரழகும் கொண்டவர். அவர் பற்றிய தனது உணர்வுகளை விபரிக்க தன்னிடம் வார்த்தைகள் இல்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாய்மூலமான வினாக்களுக்கான நேரத்தின் போது றோசி சேனாநாயக்கா எம்.பி. அமைச்சர் குமார வெல்கமவிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘அழகு ராணியான றோசி சேனாநாயக்காவின் கேள்விக்கு பதிலளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு வசீகரமான பெண். என் உணர்வுகளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை’ என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, அமைச்சர் வெல்கமவின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
‘எனது உணர்வுகளை இங்கு விளக்க முடியாது. நீங்கள் வெளியே வந்து என்னை சந்தித்தால் நான் அதை விபரிப்பேன்’ என காமினி ஜயவிக்கிரம பெரேராவை பார்த்து அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட றோசி சேனாநாயக்கா எம்.பி ‘ஒரு பெண் என்ற வகையில் தனது வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அமைச்சர் கருத்து கூறியிருக்கக் கூடாது. நான் இதை அவமானமாக கருதுகிறேன். எனது பெண்மை பற்றியும் வெளித் தோற்றம் பற்றியும் அமைச்சர் பேசியிருக்கக் கூடாது’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம ‘நான் பெண்களை அவமானப்படுத்த மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்’ என கூறியவாறே அவர் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter