சவூதி அரேபிய
'நிதாஉல் ஹைறாத்' நிதியுதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வினியோகம்.
-மாகாண அமைச்சர் மன்சூர் தலைமையில் நிகழ்வு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' (மனித அபிவிருத்திக்கான சர்வதேச ஆணைக்குழு) நிதியுதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் பெறுவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (14) சம்மாந்துறையிலுள்ள மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் பணிமனையில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' நிறுவனப் பணிப்பாளர் அஸ்சேஷ்.காலித் அத் தாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் நிதாஉல் ஹைறாத் உதவிப் பணிப்பாளர்களான அஸ்சேஷ்.இபுனு பஹத், அஸ்சேஷ் இபுனு அலி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.எம்.தௌபீக், யூ.எல்.பசீர், ஏ.எம்.தபீக், சிறுவர் நன்நடத்தை பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெவ்வை , பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உயரதிகாரிகள், வைத்தியர்கள், மற்றும் கல்விமான்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் ரூபாய் 16 இலட்சம் பெறுமதியான காசோலைகள் இன்றைய தினம் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லோருக்குமாக வழங்கப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் தம்மால் முன்னேடுக்கப்படுமென மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உறுதி அளித்தார்.

இறுதியில் மாகாண அமைச்சர் மன்சூரிற்கு சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' நிறுவனப் பணிப்பாளர் அஸ்சேஷ்.காலித் அத் தாவூத்தினால் நினைவுப் பரிசொன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.