அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

விபச்சார விடுதிகளை அங்கீகரிப்பது இஸ்லாத்தை நிராகரிப்பதற்கு நிகரானது! அலிஸாஹிர் மௌலானா கண்டனம்!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்: 
'எழுத்தாளர், ஆய்வாளர், தான் ஒரு பெண் சமூகத்தின் குரல் என்பதற்கெல்லாம் முன்னால் தான் முதலில் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு எதனையும் சிந்தித்துச் சொல்லியிருக்க வேண்டும், அதன்படி செயற்பட்டிருக்கவும் வேண்டும். 
இஸ்லாம் எதனை (ஹறாம்) விலக்கப்பட்டது எனத் தடுத்திருக்கின்றதோ அதற்கு மாற்றுத் தீர்வாக மனித அறிவுக்கு எட்டிய கருத்துக்களை முன்வைக்க முடியாது.' 

இவ்வாறு பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிலா ஸெய்யித் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி தொடர்பான கண்டனத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஆவர் அந்தக் கண்டனத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாம் முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு புனித சட்ட நூலான அல்குர்ஆன் மற்றும் அதன் வழிகாட்டி ஹதீஸ் சரீ அத் சட்டம் அடிப்படையில் ஹறாம் என்பது திட்டவட்டமாக ஹறாம்தான் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
இந்தப் பேட்டியினூடாக இஸ்லாம் தடுத்திருக்கின்ற விடயங்களை வலியுறுத்தி இருக்கலாம். அதற்கு நல்ல வாய்ப்பிருந்தது.! பெண்களின் மகிமையை மேம்படுத்துவதற்கான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக பெண்களை இழிவுபடுத்திப் பார்த்து, பின்னர் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது கேவலமானது.
இப்படிப்பட்ட விடயங்கள் மானுட நேயங்களை எள்ளி நகையாடும் சில மேற்குலக நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம் ஆனால், நமது உயர் விழுமிய கலாச்சாரப் பண்பாடுகளுக்குப் பொருந்தாது.
குறிப்பிட்ட பேட்டி அது ஊருக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கை நாட்டின் எல்லா சமூகங்களுக்கும் அவமானமாகவேதான் அமைந்து விட்டது.
சிறுவர் துஷ்பிரயோகத்தையும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும் தடுப்பதற்கு நமது நாட்டில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.
பாலியல் தொழிலை அங்கீகரிப்பதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி கண்டு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுவது சேலையை விற்று மானத்தை வாங்குவோம் என்பதற்கு ஒப்பான முட்டாள்தனமான கூற்று.
அதிகப் பிரசங்கித் தனம் கூடாது. மார்க்க விசயங்களில் மற்றவர்களை நாம் பிழையான வழி நடத்தல்களுக்கு இட்டுச் செல்ல முடியாது. இஸ்லாம்; கோணலற்ற தெளிவான வழியைக்காட்டுகின்ற மார்க்கம்.' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விபச்சாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் பெண் ஊடகவியலாளரின் கருத்து-உலமா கட்சி கண்டனம்



எப்.எம்.பர்ஹான் / ஜுனைட் எம்.பஹ்த்: 
நாட்டில் விபச்சாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,
இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது. விபச்சாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட தரித்திரியமே மிகவும் அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.
இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சுமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.
தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.
இக்கருத்தை கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி; வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது

பாலியல் தொழில் சமூகத்தை சீரழிக்கும்; சர்மிளாவின் கூற்றுக்கு சல்மா ஹம்சா கண்டனம்!


ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள சர்மிளாவின் கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக சர்மிளா கூறியிருப்பதானது ஒரு பெண் மனிதநேய செயற்பாட்டாளர் என்ற வகையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.
இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை ஒழிப்பதற்கு பொது நிறுவனங்களும் அரசாங்கமும் பாடுபட்டு வரும் நிலையில் இந்த விடயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என சர்மிளா கூறியிருப்பதானது சமூகச் சீரழிவை அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகவே மாறிவிடும் அபாயமுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று. ஏனெனில் பாலியல் தொழிலுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் சென்றவர்களும் தவறாக பயன்படுத்தப்பட்ட பெண்களும் அல்லது அதில் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அதிலிருந்து மீட்டெடுக்க பெண்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாடுபட்டு வரும் நிலையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் ஆலோசனையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அதேபோன்று இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்மிளாவின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தின் கலாசார பாரம்பரியம் என்பது ஒழுக்க விழுமியங்களை சார்ந்துள்ளது. சர்மிளாவின் இந்த கருத்தானது ஒழுக்க விழுமியத்துக்கு மாசு கற்பிக்கும் கருத்தாகும். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்ற ஆலோசனையை எந்தவொரு மனிதநேய பெண் செயற்பாட்டாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து கொண்டு இஸ்லாமிய நெறிமுறைகளை மீறி சர்மிளா இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதை கண்டிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு ஆலோசனைக்கு எதிராக பெண் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் சார்பான அரசசார்பற்ற நிறுவனங்கள் குரல் கொடுப்பதுடன் இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளியிட வேண்டும்.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்!


பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்று சர்மிளா செய்யித் எனும் சமூக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தென் மாகாண சபையின் ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்ற நிலையிலேயே முஸ்லிம் பெண்னொருவர் இக்கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாளருமான சர்மிளா செய்யத் BBC செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;,
“பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.
இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது. அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும்.
ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கொடியை தாங்கிய முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில்..

ரோஹித ராஜபக்ஷவின் கனவு பலிக்கிறது. இலங்கை கொடியை தாங்கிய முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில்.. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு
 இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி - பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

எச் ஐ வி பரவல் வீதம் குறைகிறது - ஐ நா



எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தும் கிருமி
எச் ஐ வி தொற்றை ஏற்படுத்தும் கிருமிஎச் ஐ வி நோய்க்கான சிகிச்சையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் பயன் பெறுகின்ற அதேவேளையில், பல நாடுகளில் எச் ஐ வி தொற்று ஏற்படும் வீதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இந்த தொற்று நோய் பரவுதல் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக, யுஎன் எயிட்ஸ் நிறுவனம் விபரிக்கிறது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மலாவியிலும், பொட்ஸ்வானாவிலும் தொற்று வீதம்70 வீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.
சிகிச்சையும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொற்று ஏற்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வைரஸ் எதிர்ப்பு மாத்திரகளை பெறுகிறார்கள்.

துப்பாக்கி ஏந்திய சிறுவர்களை புத்தகப் பை தூக்கச் செய்துள்ளோம்: நாமல் ராஜபக்ச


துப்பாக்கி ஏந்திய சிறுவர்களை புத்தகப் பை தூக்கச் செய்துள்ளோம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்கள் திருப்தி அடைய வேண்டும். நாட்டின் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமிய பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணனி ஆகிய பாடங்களை கற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் நாட்டின் சகல மாணவ மாணவியருக்கும் மடிக் கணனிகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளிலும் பழைய மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துபாயில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பெண்ணுக்கு சிறை


துபாய் நாட்டில், தான் பணிபுரிந்த வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பணிப்பெண்ணொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 10ம் திகதி 3 லட்சம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டதாக குறித்த இலங்கை பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, துபாய் நீதிமன்றம் 6 மாதகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை பணிப்பெண் சுமார் 12 வருடங்களாக குறித்த வீட்டில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக்குமாறு கோரிக்கை


இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்க வேண்டுமென தென்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்னவினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் இது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம் பேர் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சுற்றுலாத் துறையில் அபிவிருத்திக்கான இந்த தொழில் முக்கியத்துவம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைக்குமாறும் பொருளாதார அமைச்சிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரியாவிலும், தாய்லாந்திலும் விபசாரத்தை மேம்படுத்துவதன் மூலமே சுற்றுலாத்துறையை முன்னேற்றலாம் என்பதை தாம் அண்மையில் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்தபோது தெரிந்துகொண்டதாக அஜித் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கல் : சுற்றுலாதுறைக்கு நல்லது ஆனால் பெண்களுக்கு?



இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்று தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.
அத்துடன் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இப்படியாக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்கின்ற கருத்தை சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் ஏற்றுக்கொள்கிறார்.
இலங்கை ஒரு பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது என்றும் அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் சர்மிளா கூறுகிறார்.
ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
இருந்தபோதிலும், இந்தத் தொழில் சட்டபூர்வமாக்கப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபடும் தரகர்களே அதிக பலனைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி அமெரிக்க உயர் அதிகாரியிடம் விளக்கம்!



கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நீதித்துறையின் பங்களிப்புப் பற்றி நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளல் கலாநிதி அலைஸ்ஸா அய்ரஸ் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்தார்.
நீதியமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிசோன், அரசியல் விவகார ஆலோசகர் மைக்கல் ஹொனிங்ஸ்டீன் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமிலினி டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், முன்னர் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்தும், மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் விளக்கிக் கூறினார்.
இலங்கையின் செயல்திறன் மிக்க நீதித்துறை பற்றியும், நம்பகமான நீதித்துறை வழிமுறைகள் பற்றியும் அமைச்சர் மேலும் விளக்கினார். ஊடக சுதந்திரம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அதன் சில முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் அமைச்சர் ஹக்கீம் எடுத்துக் கூறினார்.
பிணக்குகளுக்கு தீர்வு காணும் மாற்றுப் பொறிமுறை பற்றி அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாபிக்கும் போது கிராம மட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இணக்கச் சபைகளின் ஊடாக நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்குகளின் எண்ணிக்கையை கணிசமான எண்ணிக்கையில் குறைப்பதற்கு முடிந்திருப்பதோடு, வழக்குத் தாமத்தையும், கால விரயத்தையும் அதன் விளைவாக ஏற்படும் வீண் செலவுகளையும் குறைக்க முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்தப்பொறிமுறை 65 சதவீதம் வெற்றியளித்திருப்பதாகவும், யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவும் சூழ்நிலையில் மத்தியஸ்த சபைகள் எனப்படும் இணக்க சபைகளின் செயற்பாட்டை நாட்டின் வடகிழக்கு மாகாணங்களுக்கும் விஸ்தரிக்க முடிந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படும் பரந்துபட்ட இணக்க சபைகளின் நடைமுறையை பின்பற்றுவதற்கு ஏற்கனவே நேபாளம், சீனா போன்ற நாடுகள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், காணி, நிலபுலன்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரங்களிலும் இணக்க சபைகளை ஈடுபடுத்தி நிலவுடமையாளர்களுக்கு நீதி நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க நீதிமன்றங்களுக்கு வெளியிலான சட்டரீதியான செயல்பாட்டின் சாத்தியக் கூறுகள் பற்றியும் நீதியமைச்சு ஆராய்ந்து வருவதாகவும், காணி பிரச்சினைகள் பற்றிய பிணக்குகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இணக்க சபைகளில் கடமையாற்றும் சுயேட்சையான ஊழியர்களுக்கு காணி உறுதிகள் மற்றும் வரைபடங்கள் தொடர்பான பயிற்சியை வழங்குவது பற்றியும் தாம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்துக் காணப்படும் சட்ட விரோத ஆட்கடத்தல் பற்றியும், குறிப்பாக இலங்கையின் வடமேல் மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து களவாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வள்ளங்களில் செல்லும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் பற்றியும், அதனை தடுத்து நிறுத்த கையாளப்படும் நடைமுறைகள் பற்றியும் அதற்கு இரகசிய பொலிசார் உட்பட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் வழங்கி வரும் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சர் விளக்கினார்.
பயனுள்ள கருத்துப் பறிமாறலில் ஈடுபட்ட அமைச்சருக்கும், அதற்கு ஒத்துழைப்பு நல்கியை அமைச்சின் செயலாளருக்கும் அமெரிக்க பதில் பிரதிச் செயலாளர் மற்றும் தூதுவர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

காஸாவில் வபாத்தானவர் எண்ணிக்கை 135




A Hamas official has said that the anticipated announcement of a Gaza truce agreement with Israel has been delayed. 

Ezzat al-Rishq told Reuters news agency that there would be no announcement until Wednesday.

"The Israeli side has not responded yet, so we will not hold a [news] conference this evening and must wait until tomorrow," said Rishq.

"The truce is now held up because we are waiting for the Israeli side to respond."

Another Hamas official, Ayman Taha, had earlier told Reuters that the truce would be declared and in effect by 22:00GMT on Tuesday night.

There was no immediate Israeli comment on the Hamas statement or on the prospect of a ceasefire, although an Israeli spokesperson has said the deal is not quite finalised.

US Secretary of State Hillary Clinton arrived in Jerusalem on Tuesday night and has met Israeli Prime Minister Binyamin Netanyahu. She is expected to meet with Palestinian President Mahmoud Abbas on Wednesday.

Clinton will not be meeting Hamas officials. 

Al Jazeera's Peter Greste, reporting from Cairo, said that it is best to approach the news of an imminent truce deal with caution.

"It's one thing for this agreement to be signed, it's quite another for it to be implemented," said Greste.

"But here's what we do understand is to be contained in this agreement: Firstly, that Israel has agreed to stop targeted assassinations of Hamas leaders. Secondly, that Hamas has agreed to stop firing rockets over the border into Israel," said Greste.

"Thridly, that the border restrictions into Gaza will be eased, but we don't know quite what that means - we don't know what restrictions will be lifted."

He added that Egypt would be the guarantor of the agreement.

The terms of the truce, first hinted at by Egyptian President Mohamed Morsi, have not yet been disclosed. Egypt has been trying to negotiate a ceasefire with the help of Qatar and Turkey.

Al Jazeera's Nisreen El-Shamayleh, reporting from Jerusalem, said that Israeli media outlets have been quoting unnamed officials who say that Clinton will announce a ceasefire agreement negotiated by the US, Egyptian and the European Union. 

"This kind of goes along with what we've heard coming out of Cairo, with the newly-elected president, Mohamed Morsi, hinting to journalists that a ceasefire is imminent," said El-Shamayleh.

US President Barack Obama called Morsi for the third time in 24 hours on Tuesday to "commended" his efforts to secure a ceasefire in Gaza, the White House said.

"He commended President Morsi's efforts to pursue a de-escalation" in the Gaza Strip, said Ben Rhodes deputy national security advisor.

UN Secretary-General Ban Ki-moon held talks with Netanyahu in Jerusalem on Tuesday. 

'Regrettably, I'm back again in the region only nine months since my last visit, because of violence in Israel and Gaza...the world is extremely concerned at the rising loss of human lives," Ban said.

He will also meet Abbas to discuss the crisis.

Earlier on Tuesday, Ban met the Arab League chief, Nabil el-Araby, in Cairo and called for support for Morsi's efforts to mediate a truce in the conflict. 

A delegation of nine Arab ministers, led by Mohamed Amr, Egyptian foreign minister, visited Gaza in a further signal of heightened Arab solidarity with the Palestinians.

El-Araby said a ceasefire is not the the real issue facing Gaza.

"The real problem is not a truce. The real problem that the Arab and Islamic countries and all friendly countries in the world must focus on is ending the occupation," said el-Araby.

The Israeli military has struck more than 1,450 targets in Gaza since attacks began on Wednesday. Since then, 760 rockets have hit Israel while about 400 others have been intercepted by Israel's anti-missile system. 

More than 130 Palestinians have been killed in Gaza, and more than 920 injured. Four Israeli civilians and one Israeli soliders have been killed in the conflict that has also left dozens of Israelis injured.


இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம்


பலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் கண்டனப்  பேரணி நடத்தினர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஸா, ஜெ.என்.யூ ஸ்டுடண்ட்ஸ் யூனியன், எ.ஐ.பி.டபிள்யூ.எ, எ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.டி.எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் இந்த கண்டனப்பேரணி நடைபெற்றது.

அவரங்கசீப்-ஜன்பத் சாலை சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி, இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி தடைசெய்தது. இஸ்ரேல் மீதான கடும் எதிர்ப்பால் கொந்தளித்த மக்கள் போலீசின் தடுப்புகளை மீற முயன்ற போது தலைவர்கள் தலையிட்டு தடுத்தனர். நிரபராதிகளின் இரத்தத்தை உறியும் புற்றுநோய்தான் இஸ்ரேல் என்றுஎன்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப் கூறினார்.

இந்த போராட்டம் அடையாளம் மட்டுமே. இஸ்ரேல் கூட்டுப்படுகொலையை தொடர்ந்தால், கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜெ.என்.யு) மாணவர் யூனியன் தலைவர் லெனின் கூறினார். நிரபராதிகளான ஃபலஸ்தீன் மக்களை கொலை செய்வதை நிறுத்தும் வரை இத்தகைய போராட்டங்கள் உலகமெங்கும் தொடரும் என்று ஜெ.என்.யு பேராசிரியர்  கமால் மித்தர் கூறினார்.

இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்றும், சுதந்திர ஃபலஸ்தீனை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

50 மில்லியன் ரூபா செலவில் 16 உள்ளுராட்சி சபைகளுக்கு வாகனங்கள் கையளிப்பு!


(ஜே.எம். வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 15உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை சீராக மேற்கொள்வதற்கும் வீதிஅபிவிருத்திப் பணிகளை சீராக மேற்கொள்வதற்கும் தேவையான வாகனங்களை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று வழங்கி வைத்தார்.
இவ்வாகனங்களை பெற்றதனால் தத்தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாகனம் இன்மையால் தாம் எதிர் நோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாகனங்களைப் பெற்றுக் கொண்ட சபைகள் வருமாறு;
01. நொச்சியாகம பிரதேச சபை
02. கலேந்பின்துனுவௌ பிரதேச சபை
03. இப்பலோகம பிரதேச சபை
04. கந்தளாய் பிரதேச சபை
05. கோரலைப்பற்று பிரதேச சபை
06. மத்திய கண்டிபிரதேச சபை
07. கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை
08. மண்முனைப்பற்று பிரதேச சபை
09. போரதீவு பிரதேச சபை
10. ஹக்மன பிரதேச சபை
11. அம்பாந்தோட்டை பிரதேச சபை
12. முசலி பிரதேச சபை
13. யாழ்ப்பாணம் மாநகர சபை
14. வவுனியா வடக்கு பிரதேச சபை
15. அம்பாந்தோட்டை மாநகர சபை
இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தஅமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா;
இன்று எமது அமைச்சின் மூலம் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை இனங்காணப்பட்ட 15 உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கியுள்ளோம்.
இந்நிகழ்வை நாம் எமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையும் அன்னாரின் பதவிப் பிரமாணத்தைகௌரவிக்கும் வகையிலேயே இன்று ஏற்பாடு செய்தோம்.
இன்றைய நாள் உங்களுக்கு முக்கியமாதொரு நாளாகும். இங்கு பல பிரதேச மற்றும் மாநகர சபைகளின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் செயலாளர்களும் உள்ளீர்கள். நீங்கள் இன்று நாம் வழங்கிய வாகனங்கள் இல்லாததனால் அன்றாட பல தேவைகளுக்கு முகம் கொடுக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள்.
இந்த வாகனங்களைப் பெற்றதன் மூலம் உங்களின் அவ்வாறான பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீருமென நான் எதிர்பார்க்கின்றேன். மேலும் அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையையும் வழங்குவீர்கள் எனவும் மேலும் எதிர்பார்க்கின்றேன்.
எமது அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் வாகனம் இன்றி சிரமப்படும் இன்னும் பல உள்ளுராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
நாட்டில் யுத்த சூழல் இல்லாததனாலேயே இவைகளையெல்லாம் இலகுவாகச் செய்கின்றோம். இல்லாவிடின் பணத்தை யுத்தத்திற்காகவே செலவிட வேண்டியிருந்திருக்கும். எனவே யுத்தத்தை முடித்து நாட்டில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியநமது ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அவர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க,திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டப் பணிப்பாளர் மங்கலிகா,திட்டப் பணிப்பாளர் ஸ்ரீவர்த்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


site counter