அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

விபச்சாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் பெண் ஊடகவியலாளரின் கருத்து-உலமா கட்சி கண்டனம்



எப்.எம்.பர்ஹான் / ஜுனைட் எம்.பஹ்த்: 
நாட்டில் விபச்சாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,
இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது. விபச்சாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட தரித்திரியமே மிகவும் அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.
இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சுமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.
தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.
இக்கருத்தை கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி; வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)

    ஒரு படிப்புபறிவு இல்லாத பாமர பெண்மனி கூறினால் அதைப்பற்றி யோசிக்கலாம்.
    இதை கூறியது யாரு????????????????????. நான் சொல்ல வேண்டுமென்று இல்லை.
    பாரம்தூக்கி பழக்கப்பட்டவனுக்கு பாரம் தூக்குவது சாதாரணம்.
    நாம் தூக்கப்போனால் கடினம். ஆச்சரியப்படுகின்றோம் இவன் எப்படி இதை தூக்குகின்றானோ?
    இருதியில் நாம் கூறுகின்றோம் அவனுக்கு பழகிட்டு. இதிலிருந்து நீங்கள் என்ன விளங்குகின்றீர்கள்?

    நபி(ஸல்) அவர்கள் கண்ட கன்டார்கள். கனவு ஒன்று கண'டார'கள். இரு மலக்குமார்கள் என்னிடம் வந்து எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தார்கள். நானு; அவர்களுடன் சென்ற பொழுது ஒரு நெருப்பு குண்டத்தை கண்றேன் அதில் ஆண்களும், பென்களும் நிர்வானமாய் இருந்தனர். அவர்களின் கீழீருந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பு அவர்களைச்சூழ்ந்து கொள்ள அவர்கள் கூச்சலிட்டனர்.
    இவர்கள் யார் என்று நபி(ஸல்) அவர்கள் மலக்குமார்களிடம் வினவ அவர்கள் சொன்னாரகள் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று மலக்குமார்கள் கூறினார்கள்.

    அல்லாஹ் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை என்று கூறியுள்ளான். நெருப்பினாலான கவசம் வழங்கப்படும் அதை அவர்கள் அணியே வேண்டும். அந்த கவஷத்தை மலை உச்சியில் கொண்டு வைத்தால் அந்த வெப்பத்தில் மலை உருகி ஓடும்......
    சகோதரி சர்மிலா தன்னையரியாமல், சுயநினைவு இல்லாமலும் கூறியிருக்கிரார். இன்sa அல்லாஹ் அவர் தான் பேசியது தவரு என்று உனர்ந்து அவர் வாபஸ் வாங்குவார்.

    பதிலளிநீக்கு


site counter