அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

விபச்சார விடுதிகளை அங்கீகரிப்பது இஸ்லாத்தை நிராகரிப்பதற்கு நிகரானது! அலிஸாஹிர் மௌலானா கண்டனம்!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்: 
'எழுத்தாளர், ஆய்வாளர், தான் ஒரு பெண் சமூகத்தின் குரல் என்பதற்கெல்லாம் முன்னால் தான் முதலில் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு எதனையும் சிந்தித்துச் சொல்லியிருக்க வேண்டும், அதன்படி செயற்பட்டிருக்கவும் வேண்டும். 
இஸ்லாம் எதனை (ஹறாம்) விலக்கப்பட்டது எனத் தடுத்திருக்கின்றதோ அதற்கு மாற்றுத் தீர்வாக மனித அறிவுக்கு எட்டிய கருத்துக்களை முன்வைக்க முடியாது.' 

இவ்வாறு பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிலா ஸெய்யித் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி தொடர்பான கண்டனத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஆவர் அந்தக் கண்டனத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாம் முஸ்லிம் என்ற தளத்திலிருந்து கொண்டு புனித சட்ட நூலான அல்குர்ஆன் மற்றும் அதன் வழிகாட்டி ஹதீஸ் சரீ அத் சட்டம் அடிப்படையில் ஹறாம் என்பது திட்டவட்டமாக ஹறாம்தான் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
இந்தப் பேட்டியினூடாக இஸ்லாம் தடுத்திருக்கின்ற விடயங்களை வலியுறுத்தி இருக்கலாம். அதற்கு நல்ல வாய்ப்பிருந்தது.! பெண்களின் மகிமையை மேம்படுத்துவதற்கான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக பெண்களை இழிவுபடுத்திப் பார்த்து, பின்னர் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது கேவலமானது.
இப்படிப்பட்ட விடயங்கள் மானுட நேயங்களை எள்ளி நகையாடும் சில மேற்குலக நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம் ஆனால், நமது உயர் விழுமிய கலாச்சாரப் பண்பாடுகளுக்குப் பொருந்தாது.
குறிப்பிட்ட பேட்டி அது ஊருக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கை நாட்டின் எல்லா சமூகங்களுக்கும் அவமானமாகவேதான் அமைந்து விட்டது.
சிறுவர் துஷ்பிரயோகத்தையும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும் தடுப்பதற்கு நமது நாட்டில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.
பாலியல் தொழிலை அங்கீகரிப்பதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி கண்டு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுவது சேலையை விற்று மானத்தை வாங்குவோம் என்பதற்கு ஒப்பான முட்டாள்தனமான கூற்று.
அதிகப் பிரசங்கித் தனம் கூடாது. மார்க்க விசயங்களில் மற்றவர்களை நாம் பிழையான வழி நடத்தல்களுக்கு இட்டுச் செல்ல முடியாது. இஸ்லாம்; கோணலற்ற தெளிவான வழியைக்காட்டுகின்ற மார்க்கம்.' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter