அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 5 அக்டோபர், 2013

சம்மாந்துறையில் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை,பாராமரிப்புத் திணைக்களத்தின் சர்வதேச சிறுவர் தின விழா.

சம்மாந்துறையில்
கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை> பாராமரிப்புத் திணைக்களத்தின் சர்வதேச சிறுவர் தின விழா.

மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பிரதம அதிதியாகப் பங்கேற்பு.




கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை> பாராமரிப்புத் திணைக்களத்தின் 'சர்வதேச சிறுவர் தின நிகழ்வு' நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீட்; மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதாரம்> மற்றும் சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு அமைச்சின் செயலாளர் கலாநிதி.எஸ்.அமலநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்>  மற்றும் சுதேச வைத்தியம்> சமூகசேவை> விளையாட்டுத்துறை> சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு> கூட்டுறவு அபிவிருத்தி> தகவல் தொழிநுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண நன்நடத்தைத் திணைக்கள ஆணையாளர் எம்.முபாறக்>  சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஹுசைன்டீன்> விளையாட்டுத்துறைப் பணிப்பாளர்  பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர்> எம்.நசீர்> எம்.எஸ்;.எம்.ஹனீபா> சம்மாந்துறை நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெவ்வை> கல்முனை அலகுப் பொறுப்பதிகாரி எஸ்.சிவகுமார்> அக்கரைப்பற்று அலகுப் பொறுப்பதிகாரி எம்.ஏ.ஏ.வசீர்டீன்> வாழைச்சேனை அலகுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.நயிமுடீன்> சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.ஐ.கே.தஹநாயக்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
 திருகோணமலை> வாளைச்சேனை> மட்டக்களப்பு> கல்முனை> அக்கரைப்பற்று> சம்மாந்துறை> அம்பாரை போன்ற பிரதேசங்களிலுள்ள சிறுவர் நன்நடத்தைக் காரியாலய உயரதிகாரிகள்> ஊழியர்கள்> பாராமரிப்பு நிலையத் தலைவர்கள்> சிறுவர் இல்ல நிருவாகிகள்> சிறுவர்கள்> பெற்றோர்கள் எனப் பலரும்  இதில் கலந்து கொண்டனர்.
' மது ஒழியட்டும் சிறுவர் வாழ்வு மலரட்டும் ' எனும் தொனிப் பொருளிலேயே இவ்வருட சிறுவர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. தமிழ்> சிங்கள> முஸ்லிம் சிறுவர்களால் கலாச்சதர நிகழ்வுகள் பலவும் இடம் பெற்றன. இறுதியில் சிறுவர்களுக்கும்> போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற பெரியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இங்கு பேசிய மாகாண அமைச்சர் மன்சூர் ' நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் சிறுவர்கள் விடயத்தில் அதிக அக்கரை செலுத்தி வருகிறார்கள். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நாம் சிந்தித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.








site counter