அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 1 அக்டோபர், 2012

கிழக்கு மாகாண சபை கன்னி அமர்வு: தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு!



திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசித்து அங்கீகரிக்கப்பட்டு. சம்பிரதாய பூர்வமாகக் கூடியது.
சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் அதை வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது.
இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது என புதிய தவிசாளர் ஆரியவதி கலப்பதி தெரிவித்துள்ளார்.
ntrinfor.tk
ntrinfor.tk

இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு


(கெலும் பண்டார) 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக ஆவர்தன பரிசீலனையின் போது ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில்,  'இலங்கையில் மரண தண்டனையை நீக்க வேண்டும்' என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், சில மாற்றங்களுடன் தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வெண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகளின் நிலைமை பற்றி வெளிவிவகார அமைச்சும் தனியாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது.

இவற்றைவிட, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைள் கண்காணிப்பகம் என்பவையும் தமது கருத்தக்களை சமர்ப்பிக்கவுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ஒப்பந்தம் மீறப்படுவது பற்றி மனித உரிமைகள் குழுவுக்கு தனியார் முறையிட வகைசெய்யும் முதலாம் சமவாயத்திலும் மரண தண்டனையை நீக்கும் 2ஆம் சமவாயத்திலும் இலங்கை இன்னும் கையொப்பமிடவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதீப மஹாநாமஹேவ தெரிவித்தார்.

மரண தண்டனை செயற்படுத்தப்படாத நிலைமையில் அதனை நீக்கிவிடுவதே நல்லது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

பல்கலைகழகங்களில் நிலவிய பாரம்பரியத்தை மாற்றியதே பிரச்சினைக்கு காரணம்: எஸ்.பி.

 (மொஹமட் ஆஸிக்)

பல்கலைகழகங்களில் நிலவி வந்த பாரம்பரியத்தை மாற்றியதே இன்றைய பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளதே தவிர ஆசிரியர்களது சம்பளம் அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று மாலை கண்டி கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை மெனிககும்புர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்காகவும் ஸ்ரீல.சு.க. கிளையை ஆரம்பிப்பதற்காகவும் இக் கூட்டம் இடம்பெற்றது.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க...

சுதந்திரத்திற்கு பின் எந்த ஒரு தலைவரையும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு இடம் அளிக்கவில்லை. பண்டாநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச, விஜெதுங்க, சந்திரிக்கா ஆகிய என எந்த ஒரு தலைவரையும் பலகலைக்கழகங்களுக்கு செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு பல இன்னல்களை செய்தனர். ஈரியகொல்ல, வன்னிநாயக்க, ஹமீட், லலித் அத்துலத்முதலி போன்ற எந்த ஓர் உயர் கல்வி அமைச்சரையும் பல்கலைகழகங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. கல்லடித்தனர், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆனால், நான் உயர் கல்வி அமைச்சர் என்ற முறையில் இந்நிலையை மாற்றினேன். பலமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பல்கலைக்கழகங்களுக்கு வரவழைத்தேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் பலரை இடை நிறுத்தினேன். இவ்வாறான மாற்றங்களை செய்ததன் காரணமாகவே இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். பல்கலைகழக ஆசிரியர்களது சம்பளம் பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணம் உற்பட மூன்று மாகாணங்கள் டிசெம்பர் மாதம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆழும் கட்சி பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும். அதன் பின் 2013ஆம் ஆண்டில் நாட்டின் மற்றைய மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்திய பின் 2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்றும் அமைச்சர் திஸாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.





ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் பலி; 60 பேர் காயம்



ntrinfor.tk
ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் பலியாகியுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஹொஸ்ட் நகரிலேயே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில் 3 நேட்டோப் படையினர், மொழிபெயர்ப்பாளர், பொலிஸார் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்த நாட்டைச் சேர்ந்த படையினர் பலியானார்களென்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் வாகனத்திலிருந்து இறங்கிவரும்வரை தாக்குதல்தாரி காத்திருந்து குண்டை வெடிக்கவைத்ததாகவும்  பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பல மட்டங்களிலும் தாண்டவமாடும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஒழிக்கப்படுமா?


-தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா-
சர்வதேச ரீதியில் சிறுவர் தினங்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றன. எனினும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவ்வருட சிறுவர் தின தொனிப்பொருள் நாளைய சிறுவர்களுக்கு புதிய உலகம் என்பதாகும்.
***சர்வதேச சிறுவர் தின (01.10.2012) சிறப்புக் கட்டுரை***
சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வேறு தரப்பினரால் சிறுவர் சட்டபூர்வமற்ற ஒரு செயலுக்காக ஈடுபடுத்துதல் .சிறுவர் துர்நடத்தை என்பது சிறுவனாலேயே
செய்யப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயல்களாகும். இவ்விதமாக இரு விதங்களில் ஏந்தவொரு செய்கையும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெறக்கூடிய குற்றமாகும்.
சிறுவர் துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டுமாகவிருந்தால் நாட்டில் சிறுவர்க்கென்று தனியான நீதிமன்றுகள் அமைக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட உரிய தண்டனைகள் குறுகிய காலத்துள் வழங்கப்படவேண்டும் என்கிறார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக்.
ஏனைய நீதிமன்றங்களில் பகிரங்கமாக விசாரிக்கப்படும்போது பல உண்மைகள் வெளிவராமல் தூங்கிவிடுகின்றன.எனவே நாட்டில் சிறுவர் நீதிமன்றங்கள்
அமைக்கப்பட வேண்டும் என்றும் நியாயம் கூறுகிறார்.
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது.. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாகக்
காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள் கலவரங்கள் இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வருட சிறுவர் தின தொனிப்பொருள் நாட்டைக்காப்பது போல் உங்களதும் எங்களதும் சிறுவர்களைப் பாதுகாப்போம்என்பதாகும். .இவ்வருட சிறுவர் தின
தொனிப்பொருள் நாளைய சிறுவர்களுக்கு புதிய உலகம் என்பதாகும்.
இலங்கையில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபை சிறுவர் நடவடிக்கைகளுக்கு  பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்தால் ௧௯௨௯ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர்களுக்கு துர்நடத்தைகள் ஏதாவது ஏற்பட்டால் 24 மணித்தியாலயச் சேவையாக காணப்படும் 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யலாம்.
சிறுவர் துஸ்பிரயோகம் துர்நடத்தைகளில் ஈடுபடுத்துவதற்கு 120 வருடத்திற்கு மேலான தண்டனைகள் சட்டத்தில் உள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரதி தலைவி திருமதி நந்தா இந்திராவம்ச தெரிவித்தார்.
தற்காலத்தில் பாடசாலை மட்டத்தில் ஏகப்பட்ட துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிய முடிகிறது. குறிப்பாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இதில் கூடுதலாக சம்பந்தப்படுவது வேதனைக்குரியது. இது எதிர்காலத்தில் சிறந்த பாடசாலைக் கவின்னிலையை ஏற்படுத்த தடையாக அமையலாம்.
கூடவே புரிந்துணர்வுள்ள நல்ல ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எனவேதான் சிறுவர் துஸ்பிரயோகம் துர்நடத்தைகளை நீக்குவதற்கு அமைப்பானது
பாடசாலை மட்டத்தில் நல்லொழுக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது 50இற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றது.
கிராம மட்டத்தில் மேலும் காதினால் கேட்கமுடியாத பல துர்ச்சம்பவங்கள் இடம்பெறுவதை நாளாந்தம் அறிகிறோம். தந்தை மகள் வன்புணர்வு கூட
நடந்தேறியுள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க சம்பவங்கள் தினமும் பரவலாக நடக்க ஆரம்பித்துள்ளன. இதற்கெல்லாம் அடிப்படையில் காரணங்களில்லாம லில்லை. மனிதன் இயந்திர வாழ்வியலுக்குட்பட்டு மனிதத்தை இழந்து ஆன்மீக பண் புகளை இழந்து மானிட விழுமியங்களை இழந்து நடைப்பிணமாக வாழும் ஆரோக்கியமற்ற சூழலும் காரணமாகலாம்.
கிராம மட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான
விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இன்று இலங்கையில் நாவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இதில் பல்வேறு விதமான சிறுவர்கள் காணப்படுவதுடன் இவர்களின் தேவைகள் பல்வேறு விதமாக காணப்படும். இவர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.
நமது நாட்டின் தலைவர் அவர்களால் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தனால் தான் நல்ல முறையிலும் அமைதியாகவும் சிறப்பாகவும் இத்தினத்தை நாம் நினைவு கூறுகின்றோம். அத்துடன் இப்படியான ஒரு தினத்தில் சிறுவர்களை ஒன்று சேர்த்து அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்த வேண்டும். அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பூரணமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
உலகத்திலேயே பல்வேறு வகையான சிறுவர்கள் பலவகையான திறன்களுடன் பிறக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறுவர்கள் தூய்மையான உள்ளங்களை உடையவர்களாகவும் நாட்டுக்கு விசுவாசம் உள்ளவர்களாக உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த அனைத்து மாணவர்களும் சிறுவர்களாக காணப்படுவர். இவர்களை அனைவரும் கண்காணித்து அவர்களுடைய அடிப்படை தேவைகள் அடிப்படை உரிமைகள் என்பவற்றை வழங்க வேண்டும்
சிறுவர்கள் என்போர் தூய்மையானவர் ஒழுங்கானவர் இவர்களுடைய நடத்தைகளை சீர்குலைப்பதற்கு வெளியில் நிறைய சக்திகள் காணப்படுகின்றது. இதிலிருந்து பாதுகாப்பாகவும் கண்காணிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் உங்களை உங்களுக்கு பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.. உங்களை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரஜையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் அமையும் ;என்றார்.
சிறுவர் உரிமை பிரகடனம்
உலகலாவிய ரீதியில் நோக்கின் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள் பாலியல் வன்புணர்ச்சி சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும் சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக் கொள்ளுதல் கடத்துதல் மோசடிகள் உள ரீதியான பாதிப்புள்ளாக்குதல் என பல் வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
இத்தகைய நிலைமையில் இரண்டாம் உலகப் போரின் பின்னணியுடன் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. சிறுவர்கள் தொடர்பாக ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் ஒக்டோபர் முதலாம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தியமை யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும் காப்பீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம்
சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பங்கள் கடத்தல்கள் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் பிள்ளைத் தாய் பிரச்சனை போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள்!
கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்;றுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள அதேநேரம் மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களும் கடந்த காலங்களில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனி;ப்பட்ட குரோதங்களுக்காகவும் பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும் குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக்
கூறப்படுகின்றன. பெருந்தோட்டங்கள்இ கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு செல்வந்த வீடுகளுக்கும் கடைகள் ஹோட்டல்கள் கராஜிகள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர்.
பெருந்தோட்டங்களில் கடந்த 5 வருடத்திற்குள் ஹட்டன் வெலிஓயா தோட்ட சிறுவன் அர்ச்சுனன் லோகநாதன் பத்தனை போகவத்தை புவனேஸ்வரன் லிங்கேஸ்வரன் கெட்டபுலா கிருஷ்ணவேணி மஸ்கெலியா லக்ஷபான சென் அன்றூஸ் தோட்ட சிறுமியர் ஜீவராணி சுமதி ஆகியோர் வீட்டு வேலைக்கு சென்று மரணமடைந்த சம்வங்கள் மலையகத்தில் சிறுவர் தொழிலாளர்களின் நிலையைப பறைசாற்றுகின்ற அதேவேளை அண்மையில் அம்பாறையின் சென்றல் கேம்பில் மதுனுஸ்ரிகா என்ற வாணி வித்தியாலய சிறுமி முட்டை விற்கச் சென்ற வேளையில் கொடூராமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் கொழும்பில் 7வயது சிறுமி வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதனால் எதிர்கொள்கின்ற பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்வதேன்?
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்றும் உறுப்புரை 28 சிறுவர்களின் கல்வி உரிமையையும் வலியுறுத்துகின்ற போதிலும் இலங்கையில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட மேற்குறித்த சம்பவங்கள் சிறுவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய சிறுவர் கொலைகள் சம்பவங்களுக்கு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதலே காரணம் என்று ஒரு சாரார் வாதாடுகின்ற அதே நேரம் வறுமையும் பொருளாதார நெடுக்கடியும் காரணம் என இன்னொரு சாரார் வாதாடுகின்றனர்.
பெருந்தோட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழும் பிரதேசங்களில் குடும்பத்தின் பொருளாரத்தைக் கவனத்திற்கொண்டு பிள்ளைகள் பல்வேறு வேலைகளுக்கு இடைத்தரகர்கள் ஊடாக அனுப்பப்படுகின்றனர்.
மேலும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோர்களின் குறைந்த கல்வியறிவு, சிறுவர் உரிமைகள் தொடர்பான
விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகும்.
இலங்கையில் தேசிய ரீதியான கல்வி வளர்ச்சி (2003ஃ2004) 92..5 வீதமாகவுள்ள அதேநேரம் நகர்ப்புறக் கல்வி 94.8 வீதமாகவும் கிராமப்புற கல்வி வளர்ச்சியும்
பெருந்தோட்ட கல்வி வளர்ச்சியும் முறையே 92.8, 81.3 வீதமாகக் காணப்படுகின்றது.
ஏனைய துறைகளை விட பெருந்தோட்டத்துறையின் கல்வி வளர்ச்சி வீதம் குறைவடைந்திருக்கின்றமைக்கு சிறுவர் தொழில் பிரதான காரணமாகின்றது. மேலும் தேசிய ரீதியாக பாடசாலைக்கு செல்லாதோர் 7.9 வீதமாகவுள்ள அதேநேரம் பெருந்தோட்டத்;தில் 19.9 வீதமாகக் காணப்படுகின்றத. எனவே பெருந்தோட்டங்களில் மாணவர் இடைவிலகல் அதிகரித்து வருகின்றதென்பது உறுதியாகின்றது.
சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளை
இல்லாதொழிக்க முடியும். ஓவ்வொரு பெற்றோரும்இ ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.;; நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சிறுவர் தொடர்பான முக்கிய விடயங்கள்
18 வயதைப் பூர்த்தி செய்தவர சட்டப்படி பராயமடைந்தவராகக் கருதப்படுவார்.
ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்த வயது 18 ஆகும்.(முஸ்லிம் விதிவிலக்கு)
16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் அவரின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ பாலியல் தொடர்பு கொள்ளும் ஒருவர் தண்டனைச் சட்டக் கோவையின்படி பாரதூரமான குற்றத்தைச் செய்தவராகிறார்.
13 வயதுக்கு குறைவான சிறுவனை வேலைக்கமர்த்தினால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
14 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் கட்டாயமாகும். 1997ஆம் ஆண்டின் 100-35 இலக்க அரச வர்த்தமானி கூறுகிறது. பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல் கல்வியமைச்சின் 2005-17ம் இலக்க சுற்றுநிருபம் கூறுகிறது.
ஜக்கிய நாடுகளின் சிறுவர்உரிமைகள் பற்றிய உடன்படிக்கை என்பது உலகிலுள்ள சகல சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகும். இது 1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் உடன்படிக்கைக்கு இன்று வயது 101 ஆகும்.இதில் 54 பிரிவுகள் உள்ளன. முதல் 42 பிரிவுகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மீதி 12ம் அந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவேண்டியவதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவமைப்பினுள் சிறுவர் உரிமைகள்!
இலங்கையில் 1883 ல் முதல்முறையாக சிறுவர்க்கான தண்டனைச்சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்ப்டது.
பின்பு 1995 இலும் 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது.
மத்திய முகாம் மதுனுஸ்ரிகாவுக்கு நடந்தது என்ன?
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மத்திய முகாம் கிராமத்தின் மே.மதுனுஸ்ரிகா என்ற வாணி வித்தியாலய பாடசாலை மாணவியொருவர் கொடுரமான முறையில் பாலியல் வல்லுறவுட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் சம்பவம் இடம்பெற்ற திகதியும் நேரமும் 22-07-2009 பி.ப 2மணிக்கும் 5மணிக்கும் இடையில்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் உரிமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் உயிர்ப்பாக இயங்கிவரும் மனித அபிவிருத்தித் தாபனத்தின் இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் மனித உரிமை கருத்தரங்கில் பங்குபற்றிய வாணி வித்தியாலயத்தின் அதிபர் ச.சரவணமுத்து முலம் 22;ம் திகதி இரவு 9 மணிக்கு அறிந்து கொண்டார்;. இதனைத் தொடர்ந்து இத்தாபனம் இது தொடர்பாக மேலதிக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது.
23ம் திகதி இப் பிரதேசம் மிகப் பதட்டமான நிலையில் காணப்பட்டது. பாடசாலை மாணவர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டது. இராணுவமும் பொலிசாரும் இங்கு குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆரம்பத் தகவல்களின் படி இச்சிறுமி வீட்டிலிருந்த முட்டையை வழமையாக விற்கும் சிங்களக் கிராமத்திற்கு சென்ற விற்கும் வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றதால் சிங்களவர்கள் இச்சிறுமியின் கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் சிங்கள கிராமத்திற்குச்; சென்று முட்டையை விற்று விட்டு தமிழ் கிராமத்திற்கு வந்த பிறகுதான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது பின்னர்;
தெரிய வந்துது.
23ம் திகதி மனித அபிவிருத்தித் தாபனம் அம்பாரை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்திற்கு இது தொடர்பாக தெரிவித்தது. இதை அடுத்து மனித உரிமை
ஆணைக்குழு இணைப்பாளர் சறூக் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்தார. அம்பாரை மாவட்ட பொலிஸ் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.
பி.ப1மணியளவில் அம்பாரை பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலிருந்து மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டது. இந்நாய்களின் மூலம் இக்கொலையுடன் 29 வயதுடைய கனகரெட்னம் ஸ்கந்தராஜாவுக்கு தொடர்பிருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
கனகரெட்னம் ஸ்கந்தராஜா என்பவர் ஆயுதக் குழுக்களின் உறுப்பினராக கடந்த காலங்களில் செயற்பட்டிருக்கின்றார். 29 வயதாகிய இவருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். ஆனால் தற்போது இவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. மேலும் இவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இச்சிறுமியின் பிரேதம் 23ம் திகதி பி.ப 4.30 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து பிரதேச மக்களால் கனகரெட்னம் ஸ்கந்தராஜா அவர்களை
தேடும் வேட்டையில் இறங்கினர். இதில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்திருப்பது முக்கிய விடயமாகும்.
இறுதியில் பெண் வேடத்துடன் காணப்பட்ட ஸ்கந்தராஜாவை வயல் வெளியில் வைத்து ஊர் மக்களால் பிடித்து தாக்கி மாலை 7மணியளவில் கிராமத்தில் காவலுக்காக இடப்பட்டிருந்ந விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். எனினும் பொதுமக்களின் தர்ம அடியால் பின்னர் அவர் மரணமானார்.
ஆரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்வார்கள் . ஆனால் காமுகன் ஸ்கந்தராஜா விடயத்தில் 24 மணிநேரத்துள் தெய்வம் விரைவாகச் செயற்பட்டதென்றே கூற வேண்டியிருக்கிறது. இப்படி எத்தனையோ மனுனிஸ்டிகாக்கள் இன்றும் வதைக்குட்படுத்தப்படுகிறார்கள். சில வெளிவருகின்றன . பல மானம் மரியாதை கருதி வெளிவராதிருக்கின்றன.
எனவே.சிறுவர்களுக்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட சி.பா.அ.சபை பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவு சிறுவர் நன்னடத்தைப் பிரிவு போன்றன அர்ப்பணிப்புடன் கடமையாற்றுமாகவிருந்தால் பெரும்பாலான பிரச்சினைகளைக் குறைக்க அல்லது தவிர்க்க முடியும்.
சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளை
இல்லாதொழிக்க முடியும். ஓவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.;; நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பொதுமக்கள் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை மீறல்களை இல்லாதொழிக்கலாம்.

ஊழல் மோசடி தொடர்பில் முக்கிய அமைச்சர்கள் மீது விசாரணை!


சில முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிக் காலத்தில் சட்ட விரோதமான முறையில் சில முக்கிய அமைச்சர்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டுள்ளதாகக் அரச உயர்மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் குறித்த அமைச்சர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக 250க்கும் மேற்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரை!



வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக அமைச்சர் சென்றுள்ளார். இந்த பிரதிநிதிகள் குழுவில் அமைச்சர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலைமை, எதிர்கால செயற் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
முக்கியமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சர் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதிலளிக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

site counter