அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 7 நவம்பர், 2012

சாய்ந்தமருதில் வீடு மற்றும் கார் தீயிட்டு எரிப்பு; ஒருவர் மீது கத்திக் குத்து!


சாய்ந்தமருது முதலாம் குறிச்சியில் வீடு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டு குடும்பத்தினர் மத்தியில் பணக் கொடுக்கல் வாங்கல் தகராறு சண்டையாக மாறியதன் எதிரொலியாகவே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் வீடு மற்றும் கார் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற கைகலப்பின் போது ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே கத்தியால் குத்தியவரின் வீடு மற்றும் கார் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
கத்திக் குத்துக்கு இலக்கான நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக புலனாய்வு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளைமாளிகைக்குள் மீண்டும் ஒபாமா

அமெரிக்காவின்  45 ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம் பெற்ற தேர்தலில்  275 தேர்தல் தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றதை அடுத்தே அமரிக்காவின் ஜனாதிபதி யாக மீண்டும் அவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மிட் ரோம்ன்னியால்  23 மாநிலங்களில் 203 தேர்தல் தொகுதிகளிலேயே வெற்றி பெறமுடிந்தது.
 
இம்முறைஇடம்பெற்றதேர்தலில்கலிபோர்னியா,நியூயார்க்,நியூஜோர்சி,பென்ஸயல்வானியா,விஸ்கொன்சின்,மிசிகன்,மொரைலாந்து, கொலம்பியா ஆகிய முக்கிய பிரதேசங்களில் ஒபாமாவின் ஆதிக்கம்  அதிகமாக இருந்ததுடன்  டக்சாஸ் ,லூசியானா ,கென்டகி ,இன்டியானா ,தெற்கு கரோலினா ,ஜோர்ஜியா,ஒக்ளஹோமா ,மற்றும் உதாஹ் ,அலபமா ஆகிய பிரதேசங்களில்  மிட் ரோம்னியின் ஆதிக்கம் காணப்பட்டது.
 
தேர்தல் வெற்றியை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் ஆசிரியர் பெற்றிக்கா ஜேன்ஸுக்கு பிடியாணை; லண்டனில் தஞ்சம்?


சண்டே லீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜேன்ஸுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து செய்திகளை பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பெற்றிக்கா ஜேன்ஸ் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்தே மேன்முறையீட்டு நீதியரசர் பிடியாணை பிறப்பித்து வழக்கை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை தனக்கு நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் தனது பிள்ளைகளுடன் லண்டனில் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.
சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாட்டில் தஞ்சம்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமது இரண்டு மகன்மாருடன் ஜேன்ஸ் அண்மையில் புகலிடம் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட காரணத்தினால் ஜேன்ஸ் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடவுச் சீட்டை நீதிமன்றம் பெற்றுக் கொள்வதுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் பலம பொருந்திய நாடொன்றில் பெட்ரிக்கா புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், எந்த நாட்டில் பெட்ரிக்கா அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இவருக்கு எதிராக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலஆகியோர் தாக்கல் செய்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே இவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி வழக்கில் இவர் பிரதான பாத்திரம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி!


அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 

தற்போது இவர் அமெரிக்காவின் 45 ஆவது  ஜனாதிபதியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி!பராக் ஒபாமா 275 தொகுதிகளிலும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் றொம்னி 203 தொகுதிகளிலும் பெற்றி பெற்றிருக்கின்றனர்.

நிந்தவூர் மையவாடி புனரைமைப்புக்காக அமைச்சர் அதாவுல்லா இருபது லட்சம் ரூபா ஒதுக்கீடு!


நிந்தவூர் மையவாடியின் புனரைமைப்புக்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா இருபது லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளார்.
மிக நீண்ட காலமா புனரமைக்கப்படாது காணப்பட்ட இந்த மையவாடி புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அமைச்சர் அதாவுல்லாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதன பயனாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மையவாடியின் புனரமைப்பு திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மையவாடி சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் தாஹிர் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Metromirror

site counter