கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஹொஸ்ட் நகரிலேயே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பலியானவர்களில் 3 நேட்டோப் படையினர், மொழிபெயர்ப்பாளர், பொலிஸார் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்த நாட்டைச் சேர்ந்த படையினர் பலியானார்களென்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
படையினர் வாகனத்திலிருந்து இறங்கிவரும்வரை தாக்குதல்தாரி காத்திருந்து குண்டை வெடிக்கவைத்ததாகவும் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக