அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

இலங்கை கொடியை தாங்கிய முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில்..

ரோஹித ராஜபக்ஷவின் கனவு பலிக்கிறது. இலங்கை கொடியை தாங்கிய முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில்.. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு
 இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி - பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter