அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல். -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல்.
              -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி ஹரன் பெரேரா தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜென்ரல் லால் பெரேரா, காரைதீவு 631வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் பிரியந்த கமகே, அம்பாரை மாவட்ட இராணுவ சிவில் பொறுப்பதிகாரி மேஜர் நவரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் போன்றோருடன் தற்கால பாதுகாப்பு நிலவரமும், முஸ்லிம் பிரதேசங்களும் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜென்ரல் லால் பெரேரா 'முப்பது வருட பயங்கர வாதத்தை இல்லாது ஒழித்த எமது ஜனாதிபதியின் அபிவிருத்திப் பணிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில தீய சக்திகள் நமது நாட்டிற்கும், ஜனாதிபதியிற்கும் தேசிய ரீதியில் கெட்ட பெயரையும், இழுக்கையும் ஏற்படுத்த வேண்டுமென்று செயற்படுகின்றனர். சிலர் வெளிநாடுகளின் பணங்களை வாங்கிக் கொண்டு சமூகங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டும் விதமாக செயற்படுகின்றனர். இவ்விடயங்களில் மக்கள் நன்கு புத்தியைப் பாவிக்க வேண்டும். இந்த விடயங்களை சாதாரன மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது சமூகத் தலைவர்களான  உலமாக்களின் பொறுப்பாகும்' எனத் தெரிவித்தார்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter