நிந்தவூர்ப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை ஆராய்ந்து, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்மட்ட மாநாடு இன்று நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

மேலும் இம்மாநாட்டில் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.எம்.றியாஸ், கிராம சேவகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க ' யாரோ இனந்தெரியாத சிலர் அண்மைக் காலங்களாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் மக்களின் அமைதியைக் குலைத்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் தூர இடங்களிலிருந்து வர முடியாது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்களைப் பிடிக்க பொது மக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும். பொது மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது. சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கவே பொலிசார் இருக்கின்றனர். இவ்வாறான விடயங்களில் பொலிசாரைச் சந்தேகங் கொள்ளக் கூடாது. மக்களுக்கும், பொலிசாருக்குமிடையில் நல்லுறவு பேணப்பட வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக