( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்தி வரும் ' திவிநெகும' திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச கமநல சேவைகள் நிலைய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பழமரக்கன்றுத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கமநல சேவைகள் குழுத் தலைவர் எம்.மீரான், விவசாயப் போதனாசிரியர் எம்.ஜே.பாஸில், விவசாய உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்ஷாத், விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி.ரி.வடிவழகன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மா, தோடை, நாரை, ஜம்பூ, பெசன் புறூட், அகத்தி, முருங்கை, திராட்சை போன்ற 09 வகையான மரக்கன்றுகள் கொண்ட தொகுதிப் பயிர்கள் 250 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
கொட்டும் மழையைக் கூடப் பொருட்படுத்தாது மக்கள் மிக ஆர்வத்துடன் பழமரக் கன்றுகளை எடுத்துச் சென்றனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் 'மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, மக்கள் நஞ்சற்ற, சுத்தமானதும், தூய்மையானதுமான பழங்களையும், காய் கறிகளையும் புசிப்பதோடு, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக