அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 மார்ச், 2014

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில்
கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
                 -மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதி-
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி;; கணனிப் பயிற்சி நிலையத்தில் ஒரு வருடப் பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர்  கே.கலாநிதி , நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் , கல்முனை வலய நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் ' இன்று உலகம் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதாகத் திகழும் கணனித் தொழில் நுட்பத்தை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்' எனத் தெரிவித்தார்.


வலயக் கல்விப்பணிப்பாளர் ஜலீல் பேசுகையில் ' இப்பிரதேசப் பாடசாலைகளில் கலை,வர்த்தகப் பிரிவில் நல்ல முடிவுகளைப் பெற்று, சாதனைகளை நிலைநாட்டியுள்ள நீங்கள் கணனித் துறையிலும் முன்னேற்றமடைந்து சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்'  எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்  250 மாணவ,மாணவியருக்கான  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பொறுப்பாசிரியர் நுஹைல் தெரிவித்தார்.



Visual: Certificate Awarding Ceremony( IT )      (Ampara Rafeek)








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter