அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முன்னணி!


லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் மீண்டும் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆரம்பத்தில் முதலிடத்தில் சீனா காணப்பட்ட போதிலும் அமெரிக்கா சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது.
39 தங்கங்கள், 25 வெள்ளிகள், 26 வெண்கலங்கள் அடங்கலாக 90 மொத்தப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் காணப்படுகிறது.
36 தங்கங்கள், 22 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு நேற்றைய நாளை ஆரம்பித்த சீனா, ஒரு தங்கம் 2 வெள்ளிகளை மாத்திரம் பெற்று 37 தங்கங்கள், 24 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு 90 மொத்தப் பதக்கங்களோடு இரண்டாவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
25 தங்கங்கள், 13 வெள்ளிகள் 14 வெண்கலங்களோடு மொத்தமாக 52 பதங்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது. ரஷ்யா, தென் கொரியா ஆகியன தலா 12 தங்கங்களைப் பெற்றுள்ள போதிலும், ரஷ்யா அதிகளவிலான வெள்ளிப் பதக்கங்களைக் கொண்டிருப்பதால் நான்காவது இடத்திலும், தென் கொரியா 5வது இடத்திலும் காணப்படுகின்றன.
ஜேர்மனி 10 தங்கங்களோடு 6வது இடத்திலும், பிரான்ஸ், ஹங்கேரி ஆகியன தலா 8 தங்கங்களோடு 7வது, 8வது இடங்களிலும் இத்தாலி, அவுஸ்திரேலியா ஆகியன 7, 6, தங்கங்களோடு 9ம், 10ம் இடங்களிலும் காணப்படுகின்றன.
இதுவரை 43 நாடுகள் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ள அதேவேளை 90 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter