அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 9 நவம்பர், 2012

சாய்ந்தமருதில் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞன் காலமானார்!


சாய்ந்தமருதில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞன் முஹம்மது சிராஸ் (வவா) சற்று முன்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் காலமானார்.
சாய்ந்தமருது முதலாம் குறிச்சியில் வீடு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டு குடும்பத்தினர் மத்தியில் பணக் கொடுக்கல் வாங்கல் தகராறு சண்டையாக மாறியதன் எதிரொலியாகவே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் வீடு மற்றும் கார் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற கைகலப்பின் போது இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே கத்தியால் குத்தியவரின் வீடு மற்றும் கார் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
கத்திக் குத்துக்கு இலக்கான வவா என்றழைக்கப்படும் முஹம்மது சிராஸ் (வயது-24) எனும் இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்ப உறவினர் ஒருவர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக புலனாய்வு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இந்த இளைஞனுடன் சண்டையிட்டு கத்தியால் குத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பக்கத்து வீட்டு குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீடு மற்றும் கார என்பவையே எரிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter