அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

நிந்தவூரில் ஜனாதிபதியின் "தேசத்திற்கு நிழல்" மரநடுகை விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
 
அதிமேதகு ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(15)  நாடு முழுவதும் நடைபெற்ற 'தயட்ட செவன' (தேசத்திற்கு நிழல்)  தேசிய மரநடுகை விழா நிந்தவூரிலும்  சிறப்பாக நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹாநாயக்க> நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி;.எம்.மாஹீர்> கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு> மரங்களை நட்டி வைத்தனர்.  
மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌகல் அலி> விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.அலியார்> உதவி மாவட்டப் பதிவாளர் எம்.நசுறுதீன்> மற்றும் உத்தியோகத்தர்கள்> விவசாயப் பிரதிநிதிகள்> பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Visual: Thayadda Sevena in Ntr D.s.office.
Ampara Rafeek.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter