- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
எமது நாட்டின் ஆங்கிலத்தின் அவசியம் ஜனாதிபதி அவர்களால் உணரப்பட்டு அதற்கான முயற்சியின் முடிவாக எமது அயல்நாடான இந்தியாவின் உதவியுடன் எமது நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் மிகத்திறமையுள்ள பட்டதாரி ஆங்கில அசிரியர்களை பரீட்சைகள் மூலம் தெரிவு செய்து இந்திய நாட்டின் கல்வியில் முன்னேற்றமடைந்த மாநிலங்களில் ஒன்றான ஹைதரபாத் பல்கலைக்கழகத்திற்கு நான்கு மாத மொழிப்பயிற்சிக்காக 40பேர் அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அங்கு பயிற்சியினை முடித்துக்கொண்டு வந்த ஆங்கில ஆசிரியர்களை பயன்படுத்தி அன்மையில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு உட்பட்ட 40ஆசிரியர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள ஆசிரியர் வளநிலையத்தில் ENGLISH AS A LIFE SKILL SPEAK ENGLISH OUR WAY எனும் தொணியுடன் பத்துநாள் பேச்சு பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றுவதாக கல்வி அமைச்சின் இந்நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் கே.எம்.அன்சார் தெரிவித்தார்.

இதற்கு உதவியாக காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய ஆசிரியர் எம்.எச். அலியார் மற்றும் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.எஸ்.அப்துல் ஹை ஆகியோருக்கு பேராதனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சி ஆசிரியர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டு ஆங்கில பயிற்சி பட்டறைகளை இவர்கள் நடாத்தி வருகின்றனர். இப்பயிற்சி பட்டறை இன்றுடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக