அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறை!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் நிருவாகம் பற்றி போதிய தெளிவை பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை மையப்படுத்தி இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றாலும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வும் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சீர்திருத்தங்களும் என்ற கருப்பொருளில் பிரபல சட்டவல்லுநர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன இதில் கருத்தாழமிக்க உரையொன்றை ஆற்றினார்.
அதிகாரப் பகிர்வு. பரவலாக்கம் என்பவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகளையும், வலுவேறாக்கத்திற்கு இடையில் தோன்றும் முரண்பாடுகளை விபரித்துக் கூறிய அவர் மாகாண சபைகள் அதிகாரத்தை எவ்வாறு பிரயோகிக்கின்றன, மத்திய அரசு அதிகாரங்களை எப்படி பிரயோகிக்கின்றது என்பதையும், எதிர்காலத்திற்கான தமது சில முன்மொழிகளையும் குறிப்பிட்டார். இன்னும் பல பயனுள்ள அம்சங்களையும் அவர் தொட்டுப் பேசினார்.
மாகாண சபைகளின் நிருவாக முறைமையும் மாகாண சபைகளின் நிறுவன ரீதியான அம்சங்களும் என்ற தொனிப்பொருளில் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரி திரு.கே.பி. சிறிசேன நீண்ட விளக்கமொன்றை அளித்தார்.
அவர் வடமத்திய மாகாண சபை, மத்திய மாகாண சபை ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றி ஆளுநர்களின் கீழும், முதலமைச்சர்களின் கீழும் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் வழங்கிய விளக்கம் பங்குபற்றியோரை வெகுவாகக் கவர்ந்தது.
மாகாண சபைகளின் பயன்பாடுகளை அதன் உறுப்பினர்கள் சரிவர பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை திரு. சிறிசேன நன்கு விளக்கிக் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி. கட்;சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமத், எம்.ஐ.எம். மன்சூர், மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கு பற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter