அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம்கொடுக்க தயார் - தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

தமிழ் பேசும் சமூகம் என்பது அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக தாங்களே தங்களது விடயங்களை செய்து கொள்கின்ற ஒரு நிலவரம் இருக்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக உறுதியாக இருக்கின்றது. 13வது சரத்தினை நீக்குகின்ற விடயம் அதேபோன்று மாகாணசபை முறைமையை இல்லாது ஒழிக்கின்ற விடயம் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இம்முறைமையை மேம்படுத்துவதற்கான விடயங்களிலேயே அதிகமான கவனத்தை முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திருக்கிறது. நீக்குவதற்கு முயற்சிக்கின்ற யாருக்கும் இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆணித்தரமாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அதிகாரப்பரவலாக்க விடயத்தில் மிகத் தெளிவான கொள்கையோடு இருக்கின்றது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்

அக்கரைப்பற்றில் நேற்று மாலை (26.11.2012) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்,

வரலாற்று ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நிகழ்ந்த தங்களைத் தாங்களே ஆளுகின்ற விடயம் பற்றிய போக்கே இனப்பிரச்சினைக்கு தூபமிட்டது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிக மோசமான நெருக்குவாரங்களுக்கு தமிழ் பேசும் சமூகம் தள்ளப்பட்டதை யாரும் மறுத்துரைப்பதற்கில்லை. தமிழ் பேசும் சமூகத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக வேறு கண் கொண்டு பார்த்து அவர்களுக்கு நியாயமாக வழங்கப் படவேண்டிய அதிகாரத்தை வழங்க மறுத்ததனாலேயே ஒரு நீண்ட இரத்த வரலாறு இலங்கையில் உண்டானது. இவ் இரத்த வரலாற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்தியாவினுடைய தலையீட்டின் பிரகாரம் 13வது சரத்து உருவாக்கப்பட்டதோடு அதிலே மாகாண முறைமையும் தோற்றுவிக்கப்பட்டது;.

இந்த மாகாணமுறைமை என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்திய இரத்தத்தின்  சிந்திய இரத்தத்தின் விளைவாகப் பெறப்பட்ட ஒரு விடயமாகும். அவ்வாறு பெறப்பட்ட விடயத்தினை ஒரு சிலருடைய நலன்களுக்காக நாம் விட்டுக்கொடுக்கமுடியாது. ஏனென்றால் 2000ம்களில் சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைப்பு முறையிலேயே மாற்றம் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கெளுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும், தமிழர்களுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும் உருவாக்கப்படவேண்டும் என்கின்ற சிந்தனை மாற்றம் எற்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். 

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழ் நிலை இன்னும் உருவாகாத நிலையில், ஏற்கனவே அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும், அதிகாரப்பரவலாக்கத்தையும் பறித்தெடுப்பது என்பது மீண்டும் இந்த நாட்டை மிக மோசமான சூழ் நிலைக்குத்தள்ளுகின்ற ஒரு முயற்சியாக அமையும் என்று நாம் கருதுகிறோம். ஆகவே இந்த விடயத்தில் எல்லோரும் கவனமெடுத்து மாகாணசபை முறை ஊடாக இந்த அதிகாரப்பரவலாக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி, சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே எல்லாவிதமான விடயங்களிலும், சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்

அன்று மத்திய அரசாங்கத்திலே மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்கின்ற சிந்தனை உருவாக்கம் பெற்றதற்குப்பிறகு, இந்த மாகாணசபை முறைமை கூட அதிகாரப்பரவலாக்கத்திற்காக இருந்துவிடக்கூடாது என்று எண்ணி  அதனை இல்லாது  ஒழிக்க இப்போது சிலர் முயற்சிப்பது வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதை நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை. என்று மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter