அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இலவச இண்டர்நெட் சேவை. இனி “நெட் பில்” தொல்லை இல்லை?

உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இலவச இண்டர்நெட் சேவை. இனிநெட் பில்தொல்லை இல்லை?
- Imran Sls -


உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இணையதள சேவை இலவசமாகக் கிடைக்க இருக்கிறது.
அவுட்டர் நெட் (Outer Net) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், விண்வெளியில் இருந்து சாட்டிலைட் மூலம் வை ஃபை வழியாக உலகிலுள்ள எல்லாக் கணினியிலும் ஸ்மார்ட் தொலைபேசிகளிலும்  இணையதள சேவை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே
இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட மீடியா டெவலப்மெண்ட் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (MDIF) எனும் புகழ்பெற்ற நிறுவனம்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது.
2013 செப்டம்பரில் இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்றும் 2015 ஜூனுக்குள் இது நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வந்தால் நெட்பில் தொல்லை இருக்காதுபுதிதாக வேறு என்னென்ன தொல்லைகள் வருமோ?


 Madavala News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter