அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோன்னதமான பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும். -கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் புகழாரம்-


கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோன்னதமான பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்.
                    -கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் புகழாரம்-
                 (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
கௌரவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த மகோண்ணதமான ஆசிரியப்பணியைச் செய்கின்ற ஆசிரியர்கள் சமூகத்ததால் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள். எல்லாத் தொழில்களுக்கும் மேலான அந்தஸ்தைக் கொண்ட ஆசிரியத் தொழிலைப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகளாவர்' என்று கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நேற்று முதல் நாள் சம்மாந்துறை தேசியக் கல்லூரியில் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற 'ஆரம்பக் கல்வி அபிவிருத்தி' தொடர்பான மாநாட்டில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.நௌஷாட், அமைச்சரின் பிரேத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், இனைப்புச் செயலாளர்களான யூ.எல்.பஸீர், ஏ.எம்.தபீக் ஆகியோர் கௌரவ அததிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில்:-
ஆசிரியத் தொழில் என்பது மிகவும் கௌரவமான தொழில். இங்குள்ளவர்களில் யாருக்கேனும் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி, நீதியரசர் போன்ற உயர்ந்த தொழில்கள் கிடைக்கவில்லையே என்று நீங்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம், அவர்களையெல்லாம் உருவாக்குகின்ற உயர்ந்த ஆசிரியத் தொழில் உங்களுக்குக் கிடைத்துள்ளது. அதற்காக நீங்கள் பெருமைப்படுவதோடு, அல்லாவுக்கு நன்றி செலுத்த வேண்டும். மேலே
சொல்லப்பட்ட உயர்ந்த தொழில்களில் உள்ள யாவரும் ஆசிரியர்களை 'சேர்' என்று மரியாதையோடுதான் அழைக்கப்போகின்றனர். ஆனால் வேறு எந்தத் தொழில்களாயினும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்றவர்கள் தவிர வேறு யாரும் அப்படி மரியாதையோடு அழைப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.
ஆசிரியப் பணி என்பது மிக மகோன்னதமான பணி. மிகக் கௌரவமான பணி. எவ்வாறென்றால், நான் அமைச்சராக இருந்தாலும், சேர்மனாக இருந்தாலும் எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர்களைக் கண்டால் என்னை அறியாமலே எழுந்து நின்று சேர் என அழைப்பேன். ஒரு தடவை நான் சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவராக அக்கதிரையில் அமர்ந்திருந்த போது எனக்குக் கற்பித்த ஆனால் எனக்கு ஒரு காலத்திலும் வாக்களிக்காத ஆசிரியர் வந்தார். அவரைக் கண்டதும் எனது ஆசனத்திலிருந்து எழுந்து ஆசிரியரைக் கதிரையில் அமரச் செய்த பின்னர் எனது ஆசனத்தில் அமர்ந்தேன். இதன் பின்னர் ஒரு தேர்தல் வந்தது. வாக்குத் தேடி வீடு வீடாகச் சென்ற போது அந்த ஆசிரியரையும் சந்தித்தேன். ' உங்களுடைய ஓரு மாணவன் எம்.பியாக வந்தால் உங்களுக்கும் பெருமைதானே சேர்? எனக்குக் கிடைக்கும் மரியாதை அது உங்களுக்கும் உரியதுதானே சேர்? என்றேன். ஆனால் அந்த ஆசிரியர் அவர் கொண்ட கட்சியின் பற்றுதலால் எனக்கு வாக்குத் தரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும் அந்த ஆசிரியரைக் கூட இன்றும் நான் சேர் என்று மரியாதையோடுதான் அழைக்கிறேன். இதுதான் ஆசிரியருக்கு இருக்கின்ற மகிமை.
தும்புத் தடியால் அடித்த ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். காரணம் எதுவுமே இல்லாமல் வகுப்பறைகளில் தும்புத்தடியால் அடிப்பார்கள். அசிங்கமான கற்பித்தல் முறைகளைக் கையாண்ட ஆசிரியர்களைக் கூட மதித்து மரியாதை செய்திருக்கின்றோம். எப்படியாகப் பட்டஉயர்ந்த தொழில்களைச் செய்திட்டாலும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்கள் மீது எப்போதும் ஒரு தனிமரியாதை இருக்கும். அந்த ஆசிரியர்கள் நமக்கு என்னதான் அநியாயங்களைச் செய்திட்டாலும் அவர்கள் கற்பித்த ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது ஒரு அன்பிருக்கும். அதுதான் ஆசிரியத்துவத்தின் மகிமை.
அவ்வாறான உண்ணதமிக்க தொழில்களைச் செய்து கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளே நீங்கள் யாருக்கும் பயப்படாமல் அல்லாவுக்குப் பயந்து, உங்கள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு, இப்புனிதமான தொழிலைச் செய்யும் போது நாமும், நமது சமூகமும், நமது பிரதேசம், நம் நாடு எல்லாமே சிறப்படையும் என்பதில் ஐயமில்லை எனத் தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter