அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 22 பிப்ரவரி, 2014

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஆசிரியர் பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு மகஜர்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிந்தவூர் கிளைத் தலைவர் அல்ஹாஜ்.எம்.எஸ்.அப்துர் றசீது மௌலவி (ஷர்கி)தலைமையிலான குழுவினர் அன்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியது.
இறுதியில் ஆசிரியர்கள் தொடர்பான மகஜர் ஒன்றினை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிந்தவூர் கிளைத் தலைவர் றசீது மௌலவி கையளித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க நிந்தவூர்க் கிளைச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக், நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுப் பொறுப்பாசிரியர் ஏ.எல்.ஏ.றஸாக், எம்.சீனிமுஹம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter