அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 22 பிப்ரவரி, 2014

சம்மாந்துறை MPCS யின் எரிபொருள் விற்பனை நிலையம் மூடப்பட்டமை நிதிப்பிரச்சனையோடு கூடிய தவறான நடைமுறைகளே! CDO வின் ஒப்பம் பிரச்சினையல்ல. -உரிய அதிகாரி உண்மையை விளக்குகிறார் -

சம்மாந்துறை MPCS யின்
எரிபொருள் விற்பனை நிலையம் மூடப்பட்டமை நிதிப்பிரச்சனையோடு
கூடிய தவறான நடைமுறைகளே! CDO வின் ஒப்பம் பிரச்சினையல்ல.
           -உரிய அதிகாரி உண்மையை விளக்குகிறார் -

               ( சௌத்துல் உம்மத் )
கடந்த 2014.02.13ந் திகதி முதல் சம்மாந்துறை ப.நோ.கூ.சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல், டீசல் இல்லையென்றும், இதற்குக்  காரணம்: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரான சித்தீக் காசோலையில் ஒப்பமிட மறுத்து, தனது கையடக்கத் தொலைபேசியையும் நிறுத்தி விட்டு மறைந்ததுதான் என ப.நோ.கூ.சங்கத் தலைவர் டாக்டர் றசீட் இணையத்தளங்களில் வெளியான செய்திகளில் தெரிவித்திருந்தார். இது மாத்திரமின்றி எரிபொருள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் எழுதித் தொங்கவிடப்பட்டுள்ள ' போட்டிலும்' இது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓர் ஊடகவியலாளனென்ற வகையில் நான் மேற்படி கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரோடு தொடர்பு கொண்டு கேட்டேன்.
அதற்கு அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
சம்மாந்துறை ப.நோ.கூ.சங்கத் தலைவரால் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. மேற்படி சங்கத்தின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருள் வினியோகம் சீர் இல்லாமல் போய் பல வருடங்களாகுகின்றன. 2012ல் 15 இலட்சமாக இருந்த வங்கி மேலதிகப் பற்றை 30 இலட்சமாக அதிகரித்துக் கொடுத்தும் பெற்றோல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலும் கிழமைக்கு இரு நாட்களுக்கு மேல் பெற்றோல் இல்லை என்ற நிலையே காணப்பட்டது. அப்போதிருந்த நிருவாகம் இச்சங்கத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் ஓடிய போது திணைக்களத்தினால் நியமித்த நிருவாக சபை வாகன விற்பனை செய்த காசு 16 இலட்சத்தை இக்கணக்கிற்கு மாற்றியதால் டீசல்,பெற்றால் இல்லையென்று சொல்லாமல் இயங்கியது. ஆனால் தற்போதுள்ள புதிய நிருவாக சபை வந்து 4 மாதத்திற்கு மேலாகியும் இன்னும் டீசல், ஒயில் விற்பனை செய்யப்படவில்லை. இது இவ்வாறு இருக்க ஏதோ இப்போதுதான் பெற்றோல் விற்பனை செய்யப்படாதமாதிரியும், ஊனுழு காசோலையில் புறக்குறிப்பிட மறுத்ததுதான் காரணம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர்.
                          -02-
இதே வேளை CDO ஒருவர் ரூபா 30 இலட்சம் வங்கி மேலதிகப்பற்றுக்குத்தான் காசோலையில் புறக்குறிப்பிட முடியும். கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட தொகைதான் இது. இவற்றை நன்கு தெரிந்திருந்தும் தற்போதைய நிருவாகம் ரூபா 39 இலட்சத்திற்கும் மேல் வங்கி மேலதிகப்பற்றுப் பெறுவதற்கு காசோலையில் புறக்குறிப்பிட என்னை நாடினர். சட்டப்படி  எனக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால் காசோலையில் புறக்குறிப்பிட முடியாமல் போய் விட்டது.
இது மாத்திரமல்லாமல் கடந்த காலங்களில் உழைத்துக் காட்டுவோம் என்று வங்கியில் எடுத்த மேலதிகப்பற்று ரூபாய் 88 இலட்சத்திற்கும், கடன் ரூபாய் 55 இலட்சத்திற்கும் இவற்றிற்கு ஏற்பட்ட வட்டி பல இலட்சங்களையும் இறுக்க முடியாமல், சங்கத்தின் கணக்கில் நிலையான வைப்பாக இருந்த ரூபாய் 142 இலட்சத்தையும் பயன்படுத்தி வங்கியிலுள்ள கடனையும், மேலதிகப்பற்று, வட்டிகளையும் தீர்த்துள்ளனர். இதனால் சங்கத்திற்கு வருடாந்தம் கிடைத்து வந்த நிலையான வைப்புக்களையும், வட்டி 14 இலட்சம் வருமானம் இல்லாமல் போய் உள்ளது. இவ்வாறு ஒரு தலைமை நிருவாகத்திற்கு வங்கி மேலதிகப்பற்று அதிகரிக்க அனுமதிப்பது அச்சங்கத்தை அழிப்பதற்கு ஒப்பானதாகும்.
இன்னும் கு28 மாதாந்த முன்னேற்ற அறிக்கை 2012 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை 6 மாதங்களாக தயாரித்து ஒப்படைக்கப்படவில்லை. கு28 ஏனைய புள்ளி விபரங்கள் ஒப்படைக்காத நிலையிலும், இவ்வறிக்கைகள் வழங்கப்படாதவிடத்து காசோலைகளுக்கு ஊனுழுக்கள் ஒப்பமிடக் கூடாது என்ற ஆணையாளரின் கடுமையான உத்தரவுக்கு மத்தியிலும் வங்கி மேலதிகப்பற்றுக்கு ஒப்பமிட ஊனுழு வை கோருவது பிழையானது அல்லவா?
இவ்வாறு நிதியைக் கையாளத் தெரியாமலும், கையாண்ட நிதியிற்கு உரிய படிவங்களில் கணக்கினைக் காட்டத் தெரியாமலும் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் உண்மைகளை மறைத்து, மக்களை மடையர்கள் என நினைத்துக் கொண்டு, அவர்களது தவறுகளை மறைப்பதற்காக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (ஊனுழு) மீது வீண் பழி சுமத்தும் நோக்கில் ஊடகங்களில் தவறான, பிழையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது ஒரு தலைமை நிருவாகியிற்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter