.jpg)
நிந்தவூர் பிரதான வீதியில் ( பிரதேச செயலகத்திற்கு முன்னால்) இன்று(17) காலை இடம் பெற்ற அகோர வாக விபத்தில் அக்குறஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிர் நீத்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றித் தெரிய வருவதாவது:
அக்குறஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களான நிப்றாஸ்( வயது 22), றினாஸ்(வயது 22) ஆகிய இருவரும் அக்கரைப்பற்றிலுள்ள தமது உறவினரைச் சந்திப்பதற்காக ஆட்டோவில் நிந்தவூர் ஊடாக வரும் வழியில் எதிரே வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதுண்டதனால் இவ் அகோரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது எனத் தெரிய வருகிறது.
இதில் ஒருவர் ஸ்தலத்திலேயே மறணித்துள்ளார். மற்றயவர் கல்முனை அஸ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு மறணித்தார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருநாகரன் சம்பவ இடத்தையும், பிரேதத்தையும், ஆட்டோவையும் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
அம்பாரை உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் நிசாந்த சந்திர சேகர, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பத்மசிறி ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக