
சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்கத்தின் 9வது வருடாந்த மாநாடும், கந்தூரி நிகழ்வும் இன்று (15) சம்மாந்துறை மல்கம்பிட்டி சங்கைக்குரிய கலந்தர் சிக்கந்தர் வொலியுல்லா பள்ளிவாசல் முன்றலில் இடம் பெற்றது.
மேசன் தொழிலார்; சங்கத்தின் தலைவர் ஏ.பீ.ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ,மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர்.எம்.வை.எம்.முஸ்தபா, அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, கிறசன்கோ நிறுவனத் தலைவர் எம்.ஐ.எம்.பாயிஸ், கிறசன்கோ பணிப்பாளர் எம்.ஏ.ஏ.றஸ்மி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய மாகாண அமைச்சர் மன்சூர் ' தரமான முறையில் கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வரும் மேசன் தொழிலாளர்களை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது. மேசன் தொழிலாளர்களின் உயர்ந்த சேவைகளைப் பாராட்ட வேண்டும்.' எனத் தெரிவித்தார்.
இறுதியில் சுமார் 2000 பேருக்கான கந்தூரி நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது.
இவை அனைத்திற்கும் 'டிவான் சிமெந்து' நிறுவனத்தினர் பூரண அனுசரணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக