அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலைய விடுகை விழா.-மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பஸீர் பிரதம அதிதி-

                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று மாலை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

பாலர் நிலைய முகாமைதம்துவப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஆர்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் திடீரென்று இந்நியா பயணமானதால், அவரது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலியின் பிரத்தியேகச் செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.அமீன், இன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், அக்கரைப்பற்று குவாஸி நீதிபதியும், நிந்தவூர் பதில் குவாஸி நீதிபதியுமான எம்.ஐ.அப்துல் காதர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஹமீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் சிறுவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. சிறுவர்கள் சகலரும் பேதமின்றி, சமனாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter