
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.எம்.ரி.ஜாரியா தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரை சம்மாந்துறையிலுள்ள அவரது மக்கள் பணியகத்தில் சந்தித்து, வைத்தியசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும், அத்தியவசியத் தேவைகளையும் எடுத்துக் கூறினர்.
இறுதியில் அவை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சரிடம் வைத்தியதிகாரி கையளித்தார்.
இச்சந்திப்பின் போது அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஃபீர், மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பசீர், அபிவிருத்திக்குழு உறுப்பினர் இறைபணிச் செம்மல் கைலாயப் பிள்ளை, சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் மோகனதாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்து தருவதாக அமைச்சர் வாக்குறுதியளித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக