
நிந்தவூரில் பழம்பெருமை வாய்ந்த வீதிகளில் ஒன்றான 'மேர்சா வீதி' சுமார் 45 வருடங்களின் பின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
வெள்ளம் ஏற்படும் காலங்களில் இப்பிரதேச நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் இப்பிரதேசம் முழுவதும் நீரில் மூழ்கி, இம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழமையாகும்.
இந்நிலைமையினை இப்பிரதேச மக்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீலிடம் முறையிட்டதையடுத்து, மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி 'கொங்றீட்' வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வீதியில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயம், அல்-அதான் வித்தியாலயம், நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயம், மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசல், உபை இபுனு கவ்பு அரபுமனனக் கலாபீடம், திடீர் அனர்த்த முகாமைத்துவ எச்சரிக்கை நிலையம், மீனவர் எரிபொருள் நிலையம் எனப் பல முக்கியஸ்தலங்கள் இவ்வீதியில் அமைந்துள்ளதால் இதில்; பயணிப்போர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சுமார் 20 ஆயிரம் மக்கள் இதன் மூலம் நன்மை அடையவுள்ளனர் என்றும் எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக