அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பைசால் காசீம் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. -பிரதம அதிதியாக பைசால் காசீம் எம்.பி பங்கேற்பு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள அரச, மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இலத்திரனியல் உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நிந்தவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவித் திட்டதிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், பாடசாலை அதிபர்கள், பாலர் பாடசாலை முகாமையாளர்கள், சமூகசேவை நிறுவனங்களின் பணிப்பாளர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ரூபாய் இருபத்தி இரண்டு இலட்சம் (22,00,000) பெறுமதியான பொருட்களும், உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ' அரசாங்கத்தின் நிதியிலிருந்து பெறப்பட்ட இப்பொருட்களைப் பெற்றவர்கள், உண்மையில் இவற்றை சமூக நலனுக்காகச் செலவிட வேண்டும். இதற்கு முன்னர் சில பாடசாலைகளுக்கு பல கணனிகளை வழங்கியிருந்தேன். அவற்றை அப்பாடசாலை அதிபர்கள் தமது காரியாலயத்தில் மூடி வைத்துக் கொண்டு, அவர்களது சொந்தத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள். உண்மையில் இவை அப்பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டவை. அவர்கள் இதனை ஒரு முறையேனும் தொட்டுக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். இவ்வாறு அரசாங்கப் பணத்தின் மூலம் பெறப்படும் பொருட்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும். மறுமையில் இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்' எனத் தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter