இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
.jpg)
இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சராகச் சத்தியப்பிரமானஞ் செய்து கொண்டு கடந்த (24) அன்று தனது சொந்த ஊரான நிந்தவூருக்கு வருகை தந்த அமைச்சர் சுலைமான் ஸாபியை நிந்தவூர் இளைஞர்களும், பொது மக்களும் மாலை அணிவித்து வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.இஸ்மத், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளான எம்.ஐ.எம்.பரீட் , எம்.எம்.ஹாறூன், இமாம் கஸ்ஸாலி வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைதீவு வெட்டாற்று முகப்பிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதேச செயலக வீதியை ஊடறுத்து,இமாம் கஸ்ஸாலி வீதிவழியாகச் சென்று மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலடியில் முடிவுற்றது.
தகவல்,மற்றும் ஊடக அமைச்சர் சுலைமான் முகம்மட் ஸாபி மஸ்ஜிதுல் ஜன்னாவில் இறைவழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தமது காரியாலயப் பணிகளில் ஈடுபட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக