அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நிந்தவூர் தொழிற் பயிற்சி காரியாலய இடமாற்ற சர்ச்சை; கிழக்கு மாகாண சபையில் பிரேரணை!


(எம்.எம்.ஏ ஸமட்)
Ariff (1)நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி தலைமைக் காரியாலயம் அம்பாறை நகருக்கு இடமாற்றப்படுவதை கண்டித்து இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் விஷேட ஆட்சேபனைப் பிரேரனையொன்றை முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இப்பிரேரனை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இருப்பினும் அரச நிறுவனங்களின் எந்தவொரு தலைமைக் காரியாலயமும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், இற்றைக்குப் 17 வருடங்களுக்கு முன்னர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சித் தலைமைக் காரியாலயம் நிந்தவூரில் நிறுவப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளும் அடங்கலாக 16 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அவற்றில் 5 தொழிற் பயிற்சி நிலையங்கள் மாத்திரமே அம்பாறைத் தொகுதியில் உள்ளது. ஏனையவை தமிழ் பேசும் மக்கள் வாழும் தேர்தல் தொகுதிகளில் அமைந்துள்ளன.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள 11 தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ஏறக்குறைய 600 தமிழ் பேசும் சமூக இளைஞர் யுவதிகள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். 200க்கும் 250க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானவர்களே அம்பாறையிலும் அதையன்றி பிரதேசங்களிலுமுள்ள தொழிற்பயிற்சி நிலைங்களில் பயிற்சி பெறுகின்றனர்.அது மாத்திரமின்றி இத்தலைமைக் காரியாலயத்தில் கடமை புரியும் சகலரும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களாவர்.
இவ்வாறான நிலையில், இத்தலைமைக் காரியாலயத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதில் எவ்வித நியாயமுமில்லை.
இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டும். அதை இந்நாட்டு அரசியல் சாசனமும் உறுதி செய்கிறது.
இந்நாட்டில் வாழும் ஒரு இனம் மாத்திரம் சகல வசதிகளையும் பெற்று வாழ வேண்டுமென்று நினைப்பது மற்றுமொரு இனத்தை அடிமைப்படுத்துவதாகவே அமையும்.
ஒரு இனத்திற்கே சகல வசதிகளையும் பெறுக்கொடுக்க வேண்டுமென்று அந்த இனத்தின் அரசியில் பலமிக்கோர் முயற்சி மேற்கொள்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘எந்தவொரு இனமும் இன்னுமொரு இனத்தை அடக்கி ஒடுக்க முடியாது. அப்படியான சூழ்நிலைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’என்று ஜனாதிபதி தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைத் திறப்பு விழாவின்போது குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதியின் நிலைப்பாடு இருக்கையில், தமிழ் போசும் மக்களின் நலன்கருத்தி ஜனாதிபதியினால் 17 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி தலைமைக் காரியாலயத்தை அம்பாறை நகருக்கு மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கதெனவும் இதைத் தடுத்து நிறுத்த விஷேட ஆட்சேபனை மனுவொன்றை கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின்போது சமர்பிக்கவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்தார்.

நன்றி : மெற்றோ மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter