
நிந்தவூர் பிரதேச மக்களின் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும்' இன்று நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ. அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர் ஆர்.திரவியராஜ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், மேலதிக மாவட்டப் பதிவாளர் இஸட்.நசுறுதீன், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.அச்சி முகம்மட், நிந்தவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்திய அதிகாரி கே.எல்.எம்.நக்பர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பிரதேச மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே வேளை தழிழ் சமூர்த்திப் பயனாளிகளுக்கு சித்திரைப் புத்தாண்டுச் செலவுக்கான நன்கொடைப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு உரையாற்றுகையில் ' அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நல்ல சிந்தனையின் காரணமாகவே இன்று மக்களின் தேவைகளை அவர்களின் காலடிகளுக்குச் சென்று, அறிந்து, அவற்றைத் தீர்த்து வைக்கும் சிறப்பான ஒரு நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் மக்கள் சிரமங்கள் இல்லாமல் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதற்காக மக்கள் என்றும் ஜனாதிபதிக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.' எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக